ஹைக்கூ: திரை விமர்சனம்

By Karthick Raja Oct 23, 2026 08:51 AM GMT
Report

Haiku movie Review: இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் நடித்து இன்று வெளியாகியுள்ள ஹைக்கூ திரைப்படம் எப்படி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.

ஹைக்கூ: திரை விமர்சனம் | Haiku Movie Review

கதைக்களம்

கல்லூரியில் படித்து வரும் மனோ (ஏகன்), நண்பர்கள் சேர்ந்து செய்த குறும்பால் கல்லூரியிலிருந்து நீக்கப்படுகிறார். இதனால் அவருக்கு பைனல் இயர் படிப்பை முடிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. வேறு எந்த கல்லூரியிலும் அவரை சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள்.

இறுதியாக ஒரு கல்லூரியில் ஏகனுக்கு இடம் கிடைக்கிறது. ஆனால், அங்கு சென்று பார்த்ததால்தான் தெரிகிறது அது பெண்கள் கல்லூரி என்று. இந்த வருடம்தான் அந்த கல்லூரி Co-ed-ஆக மாற்றப்பட்டது, அதில் சேர்ந்த முதல் ஆண் மாணவன் ஏகன்.

ஹைக்கூ: திரை விமர்சனம் | Haiku Movie Review

அந்த கல்லூரியில்தான் பவளக்கொடியை (ஸ்ரீதேவி) சந்திக்கிறார் ஏகன். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இப்படியே மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கை இருக்கும் என இருவரும் நினைக்க, ஒரு கட்டத்தில் ஏகனின் செயல்கள் ஸ்ரீதேவிக்கு பிடிக்காமல் போக, வேறு வழியின்றி இருவரும் பிரிகிறார்கள்.

ஸ்ரீதேவியின் பிரிவு மிகப்பெரிய பாதிப்பை தந்தாலும், தனது வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்பதற்காக வேலையில் கவனம் செலுத்தி, நல்ல இடத்திற்கு வருகிறார் ஏகன். அந்த சமயத்தில் ஆபிசில் அவர் சந்திக்கும் பெண்தான் நிவேதா (ஃபெமினா ஜார்ஜ்).

ஹைக்கூ: திரை விமர்சனம் | Haiku Movie Review

முதலில் நண்பர்களாக பழகி வரும் இவர்கள், தங்களது கடந்த கால கதைகள் கதைகளை பகிர்ந்துகொள்ள ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் காதலர்களாக மாறுகிறார்கள். ஸ்ரீதேவியிடம் செய்த தவறுகளை ஃபெமினாவிற்கு செய்யக்கூடாது என மிகவும் கவனமாக இருக்கிறார் ஏகன். ஆனால், இது ஃபெமினாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

கொடியை இன்னும் ஏகன் மறக்கவில்லை என தெரிந்து இருவருக்கும் இடையே பிரிவு ஏற்படுகிறது. இதன்பின் இருவரும் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

கோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஏகன் இப்படத்தில் தனது நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார். 2000 பெண்கள் படிக்கும் கல்லூரியில் ஒரே ஒரு மாணவனாக இருக்கும்போது ஏற்படும் சிரமங்களை தனது நடிப்பில் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். முதல் பாதியில் காதலியிடம் அவநம்பிக்கையோடு பேசும் விதம், அதனால் ஏற்பட்ட விளைவுகள், இரண்டாம் பாதியில் பக்குவமாக காட்சிகளை கையாண்ட விதம் என நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார்.

கதாநாயகிகள் ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகிய இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். கோர்ட் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகை ஸ்ரீதேவி தன்னுடைய கதாபாத்திரத்தை கையாண்ட விதம், அதில் அவர் எடுத்த முடிவுகள் என சிறப்பாக நடித்துள்ளார்.

ஹைக்கூ: திரை விமர்சனம் | Haiku Movie Review

மின்னல் முரளி படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஃபெமினா ஜார்ஜ், டாக்சிக் காதலில் சிக்கி தவிக்கும்போதும், அதிலிருந்து விடுபட்ட புதிய வாழ்க்கையை தொடங்கும் காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார். இவர்களுடன் அதிர்ச்சி அருண் சில நகைச்சுவை காட்சிகளில் நம்மை சிரிக்க வைத்தாலும், ஒரே ஒரு எமோஷனல் காட்சியின் கலங்க வைக்கிறார். மற்ற அனைத்து நடிகர்கள், நடிகைகளும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் யுவராஜ் சின்னசாமி, சிம்பிளான காதல் கதை என்றாலும், அதை நான் லீனியராக திரைக்கதையில் சொன்ன விதம் படத்தை சுவாரஸ்யமாக கொண்டு சென்றது. காதலர்களுக்கு இடையே வரும் அவநம்பிக்கை, அதனால் வரும் சண்டை, அதன்பின் ஏற்படும் பிரிவு ஆகியவற்றை அழகாக திரைக்கதையில் வடிவமைத்துள்ளார். இதில் பலருக்கும் எமோஷனலாக கனெக்ட் ஆகும்.

ஹைக்கூ: திரை விமர்சனம் | Haiku Movie Review

முதல் பாதி போலவே இரண்டாம் பாதியும் கணிக்க முடியாத வகையில் இருந்திருக்கலாம். எமோஷனல் காட்சிகள் நிறைந்திருந்தாலும், இரண்டாம் பாதியில் அடுத்து நடக்கவிருக்கும் பல காட்சிகளை எளிதாக கணிக்க முடிகிறது. அது இப்படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கிறது.

படத்திற்கு மிகப்பெரிய பலம் பின்னணி இசை. காதல் காட்சியாக இருந்தாலும் சரி, எமோஷனல் காட்சியாக இருந்தாலும் சரி தனது பின்னணி இசையால் மிரட்டிவிட்டார் இசையமைப்பாளர் சித்து குமார். ஒளிப்பதிவு சிறப்பு. எடிட்டிங் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என சில இடங்களில் தோன்றியது. மற்றபடி அனைத்து தொழில்நுட்பங்களும் ஓகே.

பிளஸ் பாயிண்ட்ஸ்

  • நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
  • பின்னணி இசை
  • காதலர்களுக்கு கனெக்ட் ஆகும் எமோஷனல் காட்சிகள்
  • திரைக்கதை

மைனஸ் பாயிண்ட்ஸ்

  • இரண்டாம் பாதியில் கணிக்க முடிந்த காட்சிகள்

மொத்தத்தில், இந்த ஹைக்கூ காதலர்களின் மனதை கண்டிப்பாக தொடும்.    

ஹைக்கூ: திரை விமர்சனம் | Haiku Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US