Haiwaan (இந்தி): திரை விமர்சனம்

By Sivaraj Sep 12, 2026 01:17 PM GMT
Report

பிரியதர்ஷன் இயக்கத்தில் சைப் அலி கான், அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள Haiwaan இந்தி திரில்லர் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்

பார்வையற்ற நபரான ஷியாம் ரானே (சைப் அலி கான்) ஒரு அபார்ட்மெண்டின் மெயின்டனென்ஸ் மேனேஜராக இருக்கிறார்.

அத்துடன் ஓய்வுபெற்ற நீதிபதி பிரதானின் (பொம்மன் இரானி) சிறுவயது மகள் நந்தினி கார்டியனாகவும் செயல்படுகிறார்.

பிரதான் நீதிபதியாக இருந்தபோது தான் அளித்த தீர்ப்பினால் பர்ஸுராம் என்பவர் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், அவர் தன்னையும் தன் மகளையும் பழிவாங்க துடிப்பதாகவும் ஷியாமிடம் கூறுகிறார்.

Haiwaan (இந்தி): திரை விமர்சனம் | Haiwaan Movie Review

பர்ஸுராம் தன்னை பின்தொடர்வதுடன் அப்போது எச்சரிப்பதால் பதற்றத்துடனே பிரதான் நாட்களை கடக்கிறார்.

இந்த சூழலில் அபார்ட்மெண்டில் திருமண விழா ஒன்று நடக்க, அதே சமயம் பிரதான் கொல்லப்படுகிறார்.

கொலையாளியுடன் சண்டையிட்ட ஷியாம் அவரை தவறவிடுகிறார். அதன் பின்னரான போலிஸின் விசாரணையில் ஷியாம் மீது சந்தேகம் எழுகிறது.

அதன் விளைவாக பல துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஷியாம் எப்படி தப்பித்தார்? பிரதானை கொன்றவரை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

2016ஆம் ஆண்டில் மோகன்லால் நடிப்பில் வெளியான ஒப்பம் என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக்காக, இந்த Haiwaan-ஐ பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.

தான் இயக்கிய படத்தின் ரீமேக்கை 10 ஆண்டுகள் கழித்து எடுத்திருக்கும் பிரியதர்ஷன், அதே த்ரில்லர் மோடில் கொடுத்துள்ளார்.

சற்று மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை ஒரு கட்டத்திற்கு பின் பரபரவென வேகமெடுக்கிறது.

இரண்டாம் பாதியில் நடக்கும் சம்பவங்கள், ட்விஸ்ட் போன்றவை அடுத்து அடுத்து என கவனிக்க வைக்கின்றன.

அதே சமயம் படத்தின் நீளம் நம்மை சோர்வடைய செய்கிறது. அத்துடன் சைப் அலி கானுக்கும், அக்ஷய் குமாருக்கும் மாஸ் காட்சி வைக்க வேண்டும் என்பது போல் வைக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் தேவையில்லாததாக தோன்ற வைக்கிறது.

நடிகர்களைப் பொறுத்தவரை சைப் அலி கானும், அக்ஷய் குமாரும் கணக்கச்சிதமாக தங்களது கதாபாத்திரத்தை செய்துள்ளனர்.

பார்வையற்ற நபராக நேர்த்தியாக நடித்திருக்கும் சைப் அலி கான், சண்டைக்காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

அதேபோல் அக்ஷய் குமார் சைக்கோ கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். தனது கடைசி படத்தில் அஸ்ரானி ஒரு காட்சியில் காமெடியில் செம ஸ்கோர் செய்திருக்கிறார்.

பொம்மன் இரானி, ஷ்ரியா பில்கோன்கர், ராஜ்பால் யாதவ் ஆகியோர் நல்ல நடிப்பை தந்துள்ளனர். சையாமி கெர் மற்றும் ராஜேஷ் ஷர்மா இடையிலான காமெடி காட்சிகள் சிறப்பு.

ப்ரீதமின் பாடல்கள் ஓகே ரகம்; ரோனி ரபேலின் பின்னணி இசை மிரட்டல். ரோஷன் ஷங்கரின் திரைக்கதை மற்றும் வசனங்கள் அருமை.

 திவராகர் மணியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்க, படத்தொகுப்பாளர் ஐயப்பன் நாயர் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.

க்ளாப்ஸ்

  • சைப் அலி கான், அக்ஷய் குமார்
  • திரைக்கதை
  • பின்னணி இசை
  • சண்டைக்காட்சிகள்  

பல்ப்ஸ்

இரண்டாம் பாதியின் நீளம்

மொத்தத்தில் இந்த Haiwaan டீசெண்டான திரில்லர் படமாக ஈர்க்கிறது.

ரேட்டிங்: 2.75/5

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US