கேன்சர் பாதிப்பால் உயிருக்கு போராடும் பிரபல நடிகை
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஹம்சா நந்தினி. ராஜமௌலியின் நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். அவர் தனக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருந்தார்.
அவர் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருந்தார். தற்போது 16 முறை கீமோதெரபி சிகிச்சை எடுத்துகொண்டிருப்பதாக கூறி இருக்கிறார் அவர். கீமோ முடிவடைந்த நிலையில் தான் இன்னமும் புற்றுநோயில் இருந்து மீளவில்லை என தெரிவித்து இருக்கிறார். +
அடுத்த கட்டமாக அவர் சர்ஜரி செய்துகொள்ள இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அவர் கீமோ முடிந்து தலையில் முடி இல்லாமல் இருக்கும் போட்டோக்கள் சிலவற்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.
அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.