நடிகை ஹன்சிகா ஏமாற்றம் - படத்தை குறித்து உருக்கமாக பேசிய ஹன்சிகா
சோலா ஹீரோயினாக ஹன்சிகா
ஹன்சிகா தற்போது கதாநாயகியாக பல படங்களில் நடிக்கவில்லை என்றாலும், சோலா ஹீரோயினாக சில திரைப்படங்களை மட்டுமே தேர்தெடுத்து நடித்து வருகிறார்.
அப்படி, ஹன்சிகா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் மஹா. இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நீண்டகாலமாக தயாராகி வந்த இந்த படம் ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. இருப்பினும் சில பிரச்னைகளால் இந்த படம் முடங்கி உள்ளது.
ஏமாற்றமாக உள்ளது
இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள ஹன்சிகா, " இது எனது 50வது படம். தாமதம் ஆவது வலிக்கிறது என்று கூற மாட்டேன்.அதேசமயம் ஏமாற்றமாக உள்ளது. ஆனாலும் பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இப்பட கதையும், படமும் நன்றாக வந்துள்ளது ".
மேலும் " விரைவில் எல்லாம் சீராகும். படத்திற்கு சாதகமான சூழல் வரும். மீண்டும் சொல்கிறேன் இது எனது 50வது படம் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறேன் " என கூறியுள்ளார்.