நள்ளிரவில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஹன்சிகா.. வைரல் வீடியோ
தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் தற்போது இவர் நடிப்பில் மஹா, 105 Minutes உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்று இவர் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இவருக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை ஹன்சிகா தனது 30வது பிறந்தநாளை சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில், அங்குள்ள குழந்தைகள் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர்.
மேலும் நள்ளிரவில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஹன்சிகா பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ பாருங்க..
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri