இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதிக்கும் காஜல் அகர்வால், ஹன்சிகா.. அடேங்கப்பா இவ்வளவா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த காஜல் அகர்வால் மற்றும் ஹன்சிகா மோத்வானி இருவரும் தற்போது பெரிதளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள்.
பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட, தங்களது சமூக வலைத்தளம் மூலம் பல லட்சங்களை இவர்கள் சம்பாதித்து வருவதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பெரிய நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் செய்ய விருப்பம் காட்டுகின்றனர்.
இந்த விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகள், அதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அதன் மூலம் கணிசமான தொகையை சம்பாதித்து வருகிறார்களாம்.
காஜல் அகர்வால், ஹன்சிகா
நடிகை காஜல் அகர்வால் விளம்பர பதிவுகளின் ஒரு போஸ்டுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 வரை சம்பாதித்து வருகிறாராம். அதே போல் நடிகை ஒரு விளம்பர போஸ்டுக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை சம்பாதித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
பாலிவுட் நடிகைகள்
அதே போல் பாலிவுட் நடிகைகள் கத்ரினா கைஃப் ஒரு பதிவுக்கு ரூ.97 லட்சமும், நடிகை அனுஷ்கா சர்மா ஒரு பதிவுக்கு ரூ. 1 கோடி வரையும் வருமானம் பெறுவதாக கூறப்படுகிறது. மேலும் நடிகைகள் ஆலியா பட் ஒரு பதிவுக்கு ரூ. 85 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை வருமானம் பெறுகிறார்.
நடிகைகள் தீபிகா படுகோன் ஒரு பதிவுக்கு ரூ. 2 கோடியும், நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு பதிவுக்கு ரூ. 3 கோடி வரை வருமானம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை யாவும் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
