டயட்டே இல்லாமல் நடிகை ஹன்சிகா மோத்வானி பிட்டாக இருப்பது எப்படி தெரியுமா?
ஹன்சிகா மோத்வானி
நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். ஓகே ஓகே, வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல் என அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் உடல் எடை போட்டபடி நடித்தார்.
குண்டாக இருந்த ஹன்சிகாவையும் ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்தார்கள், ஆனால் அவர் என்ன நினைத்தாரோ திடீரென உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே மாறினார்.
அவர் உடல்எடை குறைத்தபோது ரசிகர்கள் பலரும் குண்டாக இருந்த ஹன்சிகா தான் எங்களுக்கு அதிகம் பிடித்தது என கமெண்ட் செய்தனர்.

உடல் எடை
சமீபத்தில் பாலிவுட் இயக்குனர் ஃபரா கான், நடிகை ஹன்சிகாவின் வீட்டிற்கு சென்று அவரை பேட்டி எடுத்துள்ளார்.
அப்போது உணவு பற்றி பேசிக் கொண்டிருந்த போது ஹன்சிகா பேசுகையில், நான் டயட்டில் இருப்பதில்லை என கூற ஃபரா கான் டயட் இல்லாமல் எப்படி எடை குறைத்து அதை நீண்ட காலத்துக்கு பின்பற்ற முடியும் என கேட்டார்.

அதற்கு ஹன்சிகா, நான் பைலேட்ஸ் கேர்ள் என்றுள்ளார். பைலேட்ஸ் (Pilates) என்பது உடல் வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் உடல் சீரமைப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒருவகை உடற்பயிற்சி முறையாகும்.
உடல் எடை குறைத்த நேரத்தில், எடைப்பயிற்சிகளில் கவனம் செலுத்திய ஹன்சிகா, தற்போது அதை பைலேட்ஸாக மாற்றியுள்ளார்.
