சிவகார்த்திகேயனுடன் ஏன் படம் பண்றீங்க.. ஏளனமாக பேசிய நபர்கள், பிரபல நடிகை கூறிய விஷயம்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன் மாறன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதே போல் ஏ.ஆர். முருகதாஸ் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. கையோடு படப்பிடிப்பையும் துவங்கினார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, மாறன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவா இணைவார் என கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று மான் கராத்தே. இப்படத்தை க்ரிஸ் திருக்குமரன் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் இந்த ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை ஹன்சிகா, சிவகார்த்திகேயன் குறித்து பேசியிருந்தார்.
ஹன்சிகா பேட்டி
இந்த பேட்டியில் "சிவகார்த்திகேயன் கண்டிப்பாக நல்ல நிலைமைக்கு வருவார் என எனக்கு தெரியும். ஆனால், மான் கராத்தே படத்தில் என்னுடன் அவர் நடித்தபோது, ஏன் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடிக்கிறீங்க என என்னிடம் கேட்டார்கள். எனக்கு தெரியும் அவர் திறமையான நபர் என்று. அவருடைய வெற்றியை பார்க்கும் போது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருகிறது" என கூறியிருந்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து ஹன்சிகா பேசிய விஷயம் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.