கணவரை விவாகரத்து செய்த நடிகை ஹன்சிகா மோத்வானி... ஜீவனாம்சம் எவ்வளவு தெரியுமா?
ஹன்சிகா மோத்வானி
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஹன்சிகா மோத்வானி.
2000களில் வெளியான ஷக்கலக்க பூம் பூம் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார், அதன்பின் சில ஆண்டுகள் கழித்து ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஹிந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வந்தவர் கடந்த 2011ம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன்பின் வேலாயுதம், அரண்மனை, ரோமியோ ஜுலியட், சிங்கம் 2 என தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து வந்தார்.

விவாகரத்து
நடிகை ஹன்சிகா கடந்த 2022ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஹன்சிகா-சோஹேல் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தற்போது மும்பை பந்தாரா குடும்பநல நீதிமன்றம் இந்த தம்பதிக்கு பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியுள்ளனர்.
ஹன்சிகா தனது விவாகரத்து விஷயத்தில் கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.