வரதட்சணை கொடுமை செய்தாரா ஹன்சிகா? நடிகை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் நடித்து பிரபலம் ஆகி அதன் பின் தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாக கலக்கியவர்.
அவர் திருமணம் செய்துகொண்டு சில வருடங்கள் கூட ஆகாத நிலையில் தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் 2021ல் நான்ஸி என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர்.
நான்சி கடந்த வருடம் ஹன்சிகா மற்றும் அவரது அம்மா மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்தார். தன்னை ஹன்சிகாவும் அவரது அம்மாவும் கொடுமைப்படுத்தியாக புகாரில் கூறி இருக்கும் நான்சி தனது பிறந்த வீட்டில் இருந்து பணம், விலையுயர்ந்த பொருட்களை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தியதாக தெரிவித்து இருக்கிறார். தனது flatஐ விற்றுவிடும்படியும் அவர்கள் கட்டாயப்படுத்தியதாக புகாரில் கூறி இருக்கிறார்.
ஹன்சிகா மனு தள்ளுபடி
தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட FIR-ஐ ரத்து செய்யும்படி பாம்பே உயர்நீதிமன்றத்தில் ஹன்சிகா மனு தாக்கல் செய்து இருந்தார்.
ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. அதனால் ஹன்சிகா மீது விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி கிடைத்து இருக்கிறது. விரைவில் ஹன்சிகா விசாரணைக்கு அழைக்கப்பட்டு, தேவைப்பட்டால் கைதும் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.