சீனா, கொரியாவில் வெளியாகும் நடிகை ஹன்சிகாவின் திரில்லர் திரைப்படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
இவர் ஒருவர் மட்டுமே நடித்துள்ள திரைப்படம் தான், 105. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது.
இந்த படத்தில் மிக குறைந்த வசனங்கள் மட்டுமே இருக்கிறதாம். அதே போல் இப்படத்தின் கதை அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்றதாக இருக்கிறதாம்.
இதனால் இப்படத்தை தமிழ் உள்பட இந்தியாவில் உள்ள பல பிராந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த படம் திகில் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டது என்பதால் சீனா, கொரியா ஆகிய நாடுகளிலும் இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Bigg Boss: ஆட்டம் போட்ட திவ்யா, சாண்ட்ராவிற்கு கிடைத்த முத்திரை... சுயரூபத்தை காட்ட ஆரம்பித்த போட்டியாளர்கள் Manithan
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri