விவாகரத்து ஆனவரை திருமணம் செய்தது ஏன்? ஹன்சிகா ட்ரோல்களுக்கு பதிலடி
நடிகை ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் நேரத்தில் திடீரென திருமணத்தை அறிவித்தார். அவரது நீண்ட நாள் காதலர் Sohael Khaturiyaவை 2022 டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
ஜெய்ப்பூரில் ஒரு பெரிய கோட்டையில் நடந்த திருமணத்தில் ஹன்சிகாவுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
விவாகரத்து ஆனவர்..
ஹன்சிகாவின் கணவர் Sohael Khaturiya ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பதால் சிலர் விமர்சித்தனர். தொழிலதிபருக்கு இரண்டாம் மனைவி ஆக ஏன் ஓகே சொன்னார் ஹன்சிகா என கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண வீடியோவை விரைவில் ஹாட்ஸ்டார் வெளியிட இருக்கிறது. அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
Don't look at past..
அதில் பேசும் ஹன்சிகா "You told me don't look at anyone's past" என குறிப்பிடுகிறார். அவரது அம்மாவிடம் பேசும் வகையில் தான் அந்த காட்சி இருக்கிறது.
அவரது இறந்தகாலத்தை பற்றி கவலையில்லை என்பதால் தான் ஹன்சிகா திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகி இருக்கிறது.
நடிகர் விஜயகாந்த்தின் தற்போதைய நிலை! நேரில் சந்தித்த விஜய்யின் அப்பா எஸ்ஏசி

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri
