விவாகரத்து செய்தியை பார்த்து ஹன்சிகா கொடுத்த ரியாக்ஷன்! பதிவை பாருங்க
நடிகை ஹன்சிகா மோத்வாணி சில வருடங்களுக்கு முன்பு காதலர் சொஹைல் கத்துரியாவை கரம்பிடித்தார். ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ஹன்சிகா தனது கணவரை தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய போவதாகவும் கடந்த சில வாரங்களாக செய்தி பரவி வருகிறது.
தனது கணவர் போட்டோக்கள் அனைத்தையும் இன்ஸ்டாவில் இருந்து ஹன்சிகா நீக்கிவிட்டார். அதனால் விவாகரத்து உறுதி தான் என நெட்டிசன்களும் கூறி வந்தனர்.

ஹன்சிகா ரியாக்ஷன்
இந்நிலையில் தனது வாழ்க்கை பற்றி வரும் செய்திகளை பார்த்து ஹன்சிகா சிரிப்பது போல ரியாக்ஷன் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோ வைரல் ஆகி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கணவரை பிரிந்த செய்தி உண்மையா இல்லையா என தற்போது நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன்.. - 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிசாமி IBC Tamilnadu