தீடீரென சம்பளத்தை உயர்த்தியுள்ள நடிகை ஹன்சிகா.. இனி பட வாய்ப்புகள் கூடுமா..? குறையுமா..?
தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.
ஆம், தற்போது மஹா, 105 உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே தான், ஹன்சிகா நடித்து வருகிறார். ஆனால், ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம்.
இந்நிலையில், ஹிந்தி படங்களில் மிகவும் பிஸியாக உள்ள ஹன்சிகா, இனி படங்களில் ஹீரோயினாக நடிக்க சுமார் ரூ. 1 கோடி வரை சம்பளம் உயர்த்தி உள்ளாராம்.
ஏற்கனவே தமிழில் குறைவான பட வாய்ப்புகள் உள்ள நிலையில், தீடீரென நடிகை ஹன்சிகா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதால், இனி பட வாய்ப்புகள் தமிழில் வருமா என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri