சிம்பு - ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா.. இதோ
நடிகை ஹன்சிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல படங்களில் பிசியாக இருந்தவர் நடிகை ஹன்சிகா. இவர் சில ஆண்டுகளாக பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.
மேலும் தற்போது ஹீரோயினாக மட்டுமே மட்டுமல்லாமல் சோலோ கதாநாயகியாகவும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அப்படி, ஹன்சிகாவின் சோலோவான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மஹா. இது ஹன்சிகாவின் 50வது திரைப்படமாகும்.
இப்படத்தில் சிம்புவும் நடித்துள்ளார். முதலில் கவுரவ வேடத்தில் நடிக்க வந்த, பின் முழுமையான கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கிவிட்டார்.
ரிலீஸ் தேதி
படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் இப்படம் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்நிலையில், தற்போது இப்படம் வருகிற ஜூலை 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.