சிம்புவுடன் இருந்த காதல் பற்றி கண்கலங்கி பேசிய ஹன்சிகா.. வைரல் வீடியோ
ஹன்சிகா திருமணம்
நடிகை ஹன்சிகாவின் திருமணம் கடந்த வருடம் 2022 டிசம்பர் 4ம் தேதி நடந்தது. அவரது நீண்ட நாள் நண்பரான சோஹைல் கத்துரியாவை தான் அவர் கரம் பிடித்தார்.
திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. அவர் தற்போது கைவசம் 7 படங்கள் வைத்து இருப்பதாக கூறி இருந்தார்.

முன்னாள் காதல் பற்றி கண்கலங்கி பேச்சு
ஹன்சிகாவின் திருமண வீடியோவை விரைவில் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியிட இருக்கின்றனர். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி வருகிறது. அதில் ஹன்சிகா அவரது முன்னாள் காதல் பற்றி கண்கலங்கி பேசி இருப்பது வைரல் ஆகி இருக்கிறது.
"நான் முன்பு (சிம்புவை) காதலித்து பப்லிக் ஆக எல்லோருக்கும் தெரிந்தது. அது மீண்டும் நடக்க வேண்டாம் என நினைத்தேன். வெளிப்படையாக அறிவிப்பது என்றால் அவர் நான் திருமணம் செய்துகொள்பவராக இருக்க வேண்டும்."
"என் நெருங்கிய நண்பரை தான் திருமணம் செய்கிறேன். என்னுடன் எல்லா நேரத்திலும் இருந்திருக்கிறார் அவர்" என ஹன்சிகா தெரிவித்து இருக்கிறார்.
குக் வித் கோமாளி 4ல் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் முதல் போட்டியாளர்! எதிர்பார்க்காத எலிமினேஷன்
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri