திருமணத்திற்கு பின் ஹனிமூன் கூட செல்லாமல் ஹன்சிகா செய்யப்போகும் விஷயம்
ஹன்சிகா திருமணம் இன்று நடக்கும் நிலையில் அவர் கணவருடன் ஹனிமூன் செல்லும் முன்பு இந்த விஷயத்தை தான் செய்ய போகிறாராம் .
பிரம்மாண்ட திருமணம்
ஹன்சிகா மற்றும் சொஹைல் கத்தூரியா திருமணம் இன்று மாலை ஜெய்ப்பூரில் இருக்கும் Mundota Fort and Palaceல் நடைபெற இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பே திருமண கொண்டாட்டம் தொடங்கிவிட்ட நிலையில் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கின்றன.
ஹனிமூன் இல்லை
திருமணத்தை முடித்ததும் ஹன்சிகா ஹனிமூனுக்கு செல்லவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் டிசம்பர் 6ம் தேதி மும்பையில் நடக்கும் ஒரு விளம்பர படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார்.
அதனை தொடர்த்து அவர் மேலும் சில ஷூட்டிங்கிங்கிலும் கலந்துகொள்ள இருக்கிறார். டிசம்பர் இடையில் எல்லா ஷூட்டிங்கையும் முடித்துவிட்டு அதன் பிறகு தான் ஹன்சிகா கணவருடன் ஹனிமூன் செல்ல இருக்கிறார் எனவும் தெரிகிறது.
அஸீமை மோசமாக திட்டி அசிங்கப்படுத்திய கமல்! ரெட் கார்டு பற்றி இப்படி சொல்லிட்டாரே