2 கோடி பட்ஜெட், 400 கோடி வசூல்.. இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம்
Indian cinema stunned by 400 crore collection movie: ரூ. 2 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளிவந்து, உலகளவில் இதுவரை ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலித்து, இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்திருக்கும் திரைப்படத்தை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
பாக்ஸ் ஆபிஸ்
குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் சரி, மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் சரி, கன்டென்ட் மட்டும்தான் இங்கு கிங் என்பதை ஒவ்வொரு முறையும் லோ பட்ஜெட் திரைப்படங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. அப்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 2 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படம் தற்போது உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 400 கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது.

ஹனுமன் அன்ஷ்
இயக்குநர் விஷால் சத்ருவேதி இயக்கத்தில் ஷோபினவ் சத்யா நடிப்பில் உருவாகி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் 'ஹனுமன் அன்ஷ்'. இப்படத்தை ஸ்வாம்பு மீடியா நெட்வொர்க் மற்றும் ஹோலி கவ் ஹோம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் சந்தன் கே ஆனந்த், அனில் ரஸ்தோகி, நிகில் துபே, பகவான்தாஸ் படேல் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் வெளியான இப்படம் சிறந்த விமர்சனத்தை பெற்றது. முதல் வாரத்தில் சற்று குறைவான வசூல் ஈட்டியிருந்தாலும், அதன்பின்னர் ரூ. 100 கோடி, ரூ. 200 கோடி என தற்போது ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் தயாரிப்பி நிறுவனத்திற்கு இப்படம் 200 மடங்கு லாபத்தை தந்துள்ளது. மேலும், இந்திய பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற பல வசூல் சாதனைகளை பார்க்க முடியும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.