இவர் பெயர் ரஜினிகாந்த்.. இவருக்கு இன்னொரு முகமும் இருக்கு.. அது என்ன தெரியுமா
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் இப்படித்தான் ஒரு ஹீரோ இருக்க வேண்டும் என்று வரைமுறை இருந்த காலகட்டத்தில் அனைத்தையும் தகர்த்தெறிந்து தனி வழியை அமைத்தவர் சிவாஜி ராவ் என்கிற சூப்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
வில்லனாக தனது திரை பயணத்தை துவங்கி, அதன்பின் ஹீரோவாக மக்கள் மனதில் இடம்பிடித்தார். பில்லா, அண்ணாமலை, முத்து, படையப்பா, சந்திரமுகி என பல கமெர்ஷியல் ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இதனால் தொடர்ந்து ரஜினிகாந்தை கமெர்ஷியல் ஹீரோவாக ஏற்றுக்கொண்டு ரசிகர்களுக்கும் ரசித்து இவருடைய ஒரு முகத்தை மட்டுமே கொண்டாட துவங்கிவிட்டனர். ஆனால், இவருக்கு வேறொரு முகமும் உண்டு.
ஒரு காலகட்டத்தில் கமெர்ஷியல் ஹீரோவாக மட்டுமின்றி கதையின் நாயகனாக இவர் நடித்த பல படங்கள் நடிப்புக்கு உதாரணமாக விளங்கி வருகிறது. ஏன், அந்த படங்கள் பலருடைய வாழ்வியலில் இருக்கும் கஷ்டங்களையும், வேதனைகளையும் எடுத்து காட்டியுள்ளது. அப்படிபட்ட படங்களை தான் தற்போது பார்க்க போகிறோம்.
நடிகர் ரஜினிகாந்த்
ஆறிலிருந்து அறுவது வரை
முள்ளும் மலரும்
ராகவேந்திரா
அவர்கள்
நெற்றிக்கண்
மூன்று முடிச்சு
இந்த படங்கள் அனைத்துமே ரஜினியின் நடிப்பை பற்றி மட்டுமே பேசும். எந்த ஒரு கமெர்ஷியல் விஷயங்களும் இல்லாமல் ரஜினிகாந்த் நடித்த இந்த அணைத்து படங்களும் பல 100 ஆண்டுகள் கடந்தும் நீடித்து நிற்கும்.
அப்படிப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளான இன்று, அவர் இன்னும் பல ஆண்டுகள் உடல்நலத்துடன் வாழ சினிஉலகம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.