ஹேப்பி பட்டேல்: திரை விமர்சனம்
ஆமிர் கான் தயாரிப்பில் வீர் தாஸ் நடித்து இயக்கியிருக்கும் ஹேப்பி பட்டேல் இந்தி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போமா.
கதைக்களம்
1991ஆம் ஆண்டில் கோவாவில் டான் ஆக இருக்கும் ஜிம்மி (ஆமிர் கான்), வெளிநாட்டினரை இருவரை கொல்ல அவர்களது வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு நடக்கும் துப்பாக்கி சண்டையில் ஜிம்மி குண்டடிபட்டு உயிரிழக்கிறார். அதேபோல் அந்த வீட்டில் வேலை பார்த்த பெண்ணும் உயிரிழக்க, தனது குழந்தையைக் காப்பாற்றுங்கள் என்று வெளிநாட்டு நபர்களிடம் கூறுகிறார்.
அவர்கள் இருவரும் குழந்தை எடுத்துக் கொண்டு இங்கிலாந்து செல்கின்றனர். அந்த குழந்தை ஹேப்பி பட்டேல் (வீர் தாஸ்) ஆக வளர்கிறது.

இந்த சூழலில் கோவாவில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி லேடி டான் Mama-வின் (மோனா சிங்) கட்டுப்பாட்டில் உள்ளார்.
அவரை மீட்க ஹேப்பி பட்டேலை தேர்வு செய்யும் MI7 உளவுப்பிரிவு, அவருக்கு உளவாளி பயிற்சி கொடுத்து கோவாவிற்கு அனுப்பி வைக்கிறது.
கோவா செல்லும் ஹேப்பி பட்டேல் நடனக் கலைஞரான ரூபாவை (மிதிலா பல்கர்) சந்திக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து எப்படி அந்த விஞ்ஞானியை Mamaவிடம் இருந்து மீட்டார்கள் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
சிவா நடித்த 'தமிழ் படம்' திரைப்படத்தைப் போல் உளவாளி கதையை பகடி செய்து வெளியாகியுள்ள படம்தான் இந்த ஹேப்பி பட்டேல்.
நடிகர் வீர் தாஸ் இப்படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குநராகியிருக்கிறார். அவருடன் இணைந்து கவி சாஸ்த்திரியும் இயக்கியுள்ளார். தயாரிப்பாளரான ஆமிர்கான் ஒரு கேமியோ ரோலிலும் நடித்துள்ளார்.
ஆமிர்கான் நடித்த காட்சிகளில் காமெடி தெறிக்கிறது. அதன் பின்னர் வீர் தாஸ் கதையை கொண்டு செல்கிறார். அவர் வெகுளியான முகபாவனையுடன் பேசுவது பல இடங்களில் காமெடியாக ஒர்கவுட் ஆகியிருக்கிறது.

குறிப்பாக M என்ற எழுத்தை வைத்து கண்டுபிடிக்க முயற்சிப்பது, இந்தி மொழியை தப்பாக பேசுவது போன்றவை சிரிக்க வைக்கின்றன.
வில்லி ரோலில் மோனா சிங் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். முடிந்த அளவிற்கு அவர் காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். ஹீரோயின் மிதிலா 3 ஸ்டெப்ஸ்களை வைத்து நடனமாடுவது செம காமெடி.
அவர் தனது பங்குக்கு படம் முழுக்க சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். இயக்குநராகவும் உள்ள வீர் தாஸ் ஆரம்பத்தில் செட் செய்த ஒன்றிரண்டு விஷயங்களை வைத்தே காமெடி செய்ய நினைத்திருக்கிறார்.
ஆனால் இரண்டாம் பாதியில் ஒரே பாணியில் அவை இருப்பதால் பெரும்பாலும் ஒட்டவில்லை. இன்னும் புதிதாக யோசித்திருக்கலாம். இம்ரான் கான் ஒரு காட்சியில் வந்து சுவாரஸ்யப்படுத்துகிறார்.
கிளைமேக்ஸில் செஃப் சஞ்சீவ் கபூரை கொண்டு வந்தது வித்தியாசமான முயற்சி. உளவாளியாக கஷ்டப்படும் காட்சிகள் துறந்தரை நினைவுப்படுத்துகின்றன.
டெல்லி பெல்லி அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவு வீர் படத்தை காப்பாற்றி பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார். மேக்கிங், பின்னணி இசை போன்ற விஷயங்கள் எல்லாம் சிறப்பாக உள்ளன.
க்ளாப்ஸ்
வீர் தாஸ்
ஒரு சில காமெடி காட்சிகள்
இரண்டாம் பாதியில் சின்ன ட்விஸ்ட்
பல்ப்ஸ்
காமெடிக்கு இன்னும் எழுதியிருக்கலாம்
தொய்வான திரைக்கதை
மொத்தத்தில் இந்த ஹேப்பி பட்டேல் பாதி ஹேப்பியை கொடுத்திருக்கிறார். பகடி படங்களை விரும்புவர்கள் பார்க்கலாம்.
ரேட்டிங்: 2.5/5
யூடியூபில் அதிக பார்வைகளை பெற்ற டாப் 5 இந்திய பாடல்களில் ஒரு தமிழ் பாடல்! எதுன்னு தெரியுமா? IBC Tamilnadu