ஹாப்பி ராஜ் திரைவிமர்சனம்

By Kathick Mar 27, 2026 08:00 AM GMT
Report

அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ள படம் ஹாப்பி ராஜ். கௌரி பிரியா, ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம், மதுரை முத்து என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஹாப்பி ராஜ் திரைவிமர்சனம் | Happy Raj Movie Review

மேலும் பல வருடங்களாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகர் அப்பாஸ், இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள ஹாப்பி ராஜ் படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. 

கதைக்களம்

கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் (ஹாப்பி என்கிற ஆனந்த் ராஜ்) தான் காதலிக்கும் பெண்கள் அனைவரும் பிரேக்கப் செய்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். அவருடைய ஒவ்வொரு காதலும் முடிவுக்கு வருவதற்கு காரணம் அவருடைய தந்தை ஜார்ஜ் மரியன் இருக்கிறார்.  

காரணம், ஜார்ஜ் மரியனின் தோற்றத்தை வைத்து அவரை குதிரை முட்டை என கேலி கிண்டல் செய்கிறார்கள். அவருக்கு பிறந்த மகன் ஜி.வி என்பதால், அவரை குட்டி குதிரை முட்டை என அழைக்கிறார்கள். இதனால் அந்த ஊரில் உள்ள எந்த பெண்ணும் ஜி.வி-யை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்கள்.

ஹாப்பி ராஜ் திரைவிமர்சனம் | Happy Raj Movie Review

இதனால், வெளியூருக்கு வேலைக்கு சென்று அங்கு, தனது குடும்பத்தை பற்றி தெரியாத ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்து, பெங்களூர் IT கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார். அங்கு தான் கதாநாயகி கௌரி பிரியாவை பார்க்கும் ஜி.வி காதலில் விழுகிறார்.

இருவரும் காதலித்து வரும் நிலையில், கதாநாயகியின் தந்தை அப்பாஸ் என்ட்ரி கொடுக்கிறார். தனது மகளின் காதலுக்கு சம்மதம் சொல்லி, திருமணத்திற்கு சம்மதம் பேசவேண்டும் என்பதால், ஜி.வி-யின் தாய், தந்தையை அங்கு அழைக்கிறார். அதுவும் தன்னுடைய 25வது திருமண நாளுக்காக சிறப்பாக அவர்களை அழைக்கிறார்.

ஹாப்பி ராஜ் திரைவிமர்சனம் | Happy Raj Movie Review

தாய், தந்தை மட்டும் வருவார்கள் என எதிர்பார்த்தால், ஊரில் உள்ள அங்காளி பங்காளி என அனைவரையும் அழைத்து கொண்டு பெங்களூருக்கு வந்து சேர்கிறார் ஜார்ஜ் மரியன். இதனால் கடும் கோபமடையும் அப்பாஸ், திருமணத்தை நிறுத்தி விடுகிறார். ஜார்ஜ் மரியனுக்கும், அப்பாஸுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. மேலும், ஜி.வி - கௌரியும் பிரிந்துவிடுகிறார்கள்.

இந்த நிலையில், மீண்டும் இந்த காதல் ஜோடி இணைந்தார்களா? அப்பாஸ், ஜார்ஜ் மரியன் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்களா? அதன்பின் என்னென்ன கலாட்டாவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் தனது முழு நடிப்பு திறமையையும் இப்படத்தில் காட்டியுள்ளார். ஆனால், அதை இன்னும் யதார்த்தமாக செய்தால், இன்னும் கூட ஏற்கும்படி இருக்கும் என தோன்றுகிறது. கதாநாயகி கௌரி பிரியா அழகான நடிப்பு, துள்ளலான ஆட்டம் மற்றும் எமோஷ்னல் காட்சிகள் என அனைத்திலும் பட்டையை கிளப்பியுள்ளார்.

ஹாப்பி ராஜ் திரைவிமர்சனம் | Happy Raj Movie Review

ஜி.வி. பிரகாஷ் கதாநாயகன் என்றாலும், கதையின் நாயகன் ஜார்ஜ் மரியன்தான். தன்னுடைய காட்சியிலும் நம்மை மெய்சிலிரிக்க வைக்கும்படி வேற லெவலில் நடித்துள்ளார். குறிப்பாக இடைவேளைக்கு பின், அப்பாஸ் முன் அமர்ந்து, தான் யார், தனக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது, தன்னுடைய ஸ்டேட்டஸ் என்னவென்று சொல்லும் காட்சியில் மாஸ் காட்டாவிட்டார்.

அதே போல், ப்ரீ கிளைமாக்ஸ் காட்சியில், தனது தந்தை குறித்து பேசும் ஜார்ஜ் மரியன் நம்மை கலங்கடித்துவிட்டார். இப்படி, அவர் எங்கெல்லாம் படத்தில் வருகிறாரோ, அங்கெல்லாம் திரைக்கதையில் தொய்வே இல்லை. இப்படியொரு கதாபாத்திரத்தை வடிவமைத்ததற்கு இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியனுக்கு பாராட்டு.

ஹாப்பி ராஜ் திரைவிமர்சனம் | Happy Raj Movie Review

பிரதிச்சயா: திரை விமர்சனம்

பிரதிச்சயா: திரை விமர்சனம்

ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் அப்பாஸ், சாக்லேட் பாய்யாக சினிமாவிலிருந்து விலகிய அப்பாஸ் தற்போது ஸ்டைலிஷ் கார்ப்ரேட் பிஸினஸ் மேனாக களமிறங்கியுள்ளார். முதல் பாதியில் இவருடைய கதாபாத்திரம் வெறுக்கும்படி இருந்தாலும், இரண்டாம் பாதியில் ரசிக்கும்படி இருந்தது. கிளைமாக்ஸில் அப்பாஸ் நடிப்பு அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது.

ஜி.வி. பிரகாஷின் அம்மாவாக நடித்த நடிகை கீதா கைலாசம், வழக்கம் போல் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக, தன் மகன் ஜி.வி-யை பார்த்துக்கொள்வதற்காக பெங்களூருக்கு வரும் கீதா கைலாசம், பண்ணும் சேட்டை, அட்ராசிட்டிஸ் எல்லாம் ரசிக்கும்படியாக இருந்தது. அதே போல், மதுரை முத்து, அதிர்ச்சி அருண், இந்தி காரர்களாக அவ்வப்போது வந்து நம்மை சிரிக்க வைத்தவர்கள் என அனைவரும் தங்களுக்கு கொடுத்த ரோலில் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஹாப்பி ராஜ் திரைவிமர்சனம் | Happy Raj Movie Review

அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் தனது முதல் படத்திலேயே இப்படியொரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள். தாழ்வு மனப்பான்மையை குறித்துதான் இப்படத்தில் அவர் பேசியுள்ளார். அதை அழகாகவும், எமோஷ்னலாகவும் நமக்கு திரைமூலம் கடத்தியுள்ளார், அதற்கு பாராட்டுக்கள்.

மேலும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, அப்பாஸ் - ஜார்ஜ் மரியன் குடும்பத்திற்கு இடையே இணைப்பை காட்டிய விதம், தந்தை - மகன் உறவு குறித்து பேசியது என பல விஷயங்களை சிறப்பாக திரைக்கதையில் கையாண்டுள்ளார்.

ஹாப்பி ராஜ் திரைவிமர்சனம் | Happy Raj Movie Review

ஆனால், பல இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. சில நகைச்சுவை காட்சிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதே போல், எடிட்டிங் சில இடங்களில் சொதப்பிவிட்டது. இதை தவிர படத்தில் மற்றபடி பெரிதாக குறை என்று எதுவும் இல்லை. பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பு. டெக்னிக்கல் ஒர்க்ஸ் இன்னும் கவனமாக கையாண்டு இருக்கலாம்.

பிளஸ் பாயிண்ட்

ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஜி.வி. பிரகாஷ், கௌரி பிரியா நடிப்பு

தாழ்வுமனப்பான்மை குறித்து பேசியது, ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை ஜட்ஜ் பண்ண கூடாது என சொன்னது.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு

எமோஷ்னல் காட்சிகள், கிளைமாக்ஸ்

மைனஸ் பாயிண்ட்

ஒர்க் அவுட் ஆகாத சில நகைச்சுவை

சில இடங்களில் சொதப்பிய எடிட்டிங்

மொத்தத்தில், சில குறைகள் இருந்தாலும், ஜார்ஜ் மரியன் ஒருவருக்காக இந்த ஹாப்பி ராஜை பார்க்கலாம்.   

ஹாப்பி ராஜ் திரைவிமர்சனம் | Happy Raj Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US