ஹரி ஹர வீரமல்லு படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஹரி ஹர வீரமல்லு
க்ரிஷ் ஜலகரமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. இப்படத்தில் கதாநாயகனாக பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ளார்.
மேலும் நிதி அகர்வால், சத்யராஜ், நாசர், பாபி தியோல், Nargis Fakhri, Nora Fatehi ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
முதல் பாதி நன்றாக உள்ளது என்றும், இரண்டாம் பாதி சொதப்பல் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
வசூல்
இந்த நிலையில், ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 75 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.