இலங்கையில் நடக்க இருந்த Hariharan Live in Concert தள்ளிவைப்பு! புது தேதி இதோ
யாழ்ப்பாணம் முத்தவெளி அரங்கில் டிசம்பர் 21ம் தேதி ஹரிஹரன் Live in Concert மற்றும் ஸ்டார் நைட் நிகழ்வு பிரமாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
SLIIT, Northern UNI நடத்தும் இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ள இருந்தனர். ஆனால் தற்போது இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது என்பதால் இந்த நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.
வெள்ளம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் நிகழ்ச்சிக்கு வருவது பாதிக்கப்படும் என்பது தான் முக்கிய காரணமாக கூறப்பட்டு இருக்கிறது.
புது தேதி
Hariharan Live in Concert மற்றும் ஸ்டார் நைட் நிகழ்ச்சியானது அடுத்த வருடம் பிப்ரவரி 9ம் தேதி நடக்கும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்திருக்கிறது.


உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
