ஆண்டி என ட்ரோல் செய்தவருக்கு கூலாக பதில் கொடுத்த சன் டிவி நடிகை
சினிமா நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கும் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே போல நெகடிவ் விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் வந்துகொண்டு தான் இருக்கின்றன.
ஹரிப்ரியா
பிரியமானவள் சீரியல் மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர் நடிகை ஹரிப்ரியா. கனா காணும் காலங்கள் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.
அவருக்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆண்டி - ட்ரோலுக்கு பதிலடி
நடிகைகள் சற்று குண்டானால் / வயதானது தெரிந்தால் அவர்களை நெட்டிசன்கள் கமெண்டுகளில் மிகவும் மோசமாக விமர்சிக்கின்றனர். அப்படி நடிகை ஹரிப்ரியாவை பார்த்து சிலர் ஆண்டி என ட்ரோல் செய்து இருக்கின்றனர்.
அதற்கு பதில் கொடுத்து இருக்கும் ஹரிப்ரியா "இளமையாக இருக்க டிப்ஸ் கொடுங்க" என அவரிடமே கேட்டிருக்கிறார்.
"ஆண்டியா இருந்தால் என்ன. வயதாவது இயற்கை, அதை எப்படி தப்பு சொல்ல முடியும். என் காலில் இருக்கும் பிரச்சனை காரணமாக என்னால் உடற்பயிற்சி செய்ய முடியாது" எனவும் தெரிவித்து இருக்கிறார்.
வெளிநாட்டில் ஷார்ட் ஆன உடையில் சுற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வைரல் புகைப்படங்கள்