லிப்ட் பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண்.. கதாநாயகி யார் தெரியுமா
ஹரிஷ் கல்யாண்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பின் படிப்படியாக படங்களில் நடிக்க தொடங்கி தற்போது பிரபல நடிகராக வலம் வருகிறார் ஹரிஷ் கல்யாண்.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பார்க்கிங் மற்றும் சமீபத்தில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
இதில், லப்பர் பந்து திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதுவரை உலகளவில் ரூ. 23 கோடிக்கும் மேல் லப்பர் பந்து திரைப்படம் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.
தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வரும் ஹரிஷ் அடுத்து யார் படத்தில் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
அடுத்த படம்
இந்நிலையில், தற்போது ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அடுத்து லிப்ட் படத்தின் இயக்குனர் வினீத் வர பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் ஒரு புது படத்தில் நடிக்க உள்ளார்.
அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக 'ஸ்டார்' படத்தின் மூலம் பிரபலமான பிரீத்தி முகுந்தன் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் முதல் தொடங்க படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
