மனசை தொட்டுட்டீங்க.. பீஸ்ட் பற்றி பேசிய யாஷை பாராட்டும் தமிழ் நடிகர்
நடிகர் யாஷ் நேற்று நடந்த பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது பீஸ்ட் படம் பேசி இருப்பது தான் இப்போது வைரல் ஆகி வருகிறது.
இது மோதல் இல்லை
பீஸ்ட் படத்துடன் மோதுவது பற்றி உங்கள் கருத்து என்ன என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு, "இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனால் அது 'பீஸ்ட் & கேஜிஎப்2' தான் 'பீஸ்ட் vs கேஜிஎப் 2' அல்ல. இது எலக்ஷன் அல்ல. எல்லோரிடமும் ஒரே ஒரு ஓட்டு தான் இருக்கும், அதை அதிகம் பெறுபவர் வெற்றி பெறுவார். ஆனால் இது சினிமா. இரண்டு படங்களையும் பார்க்கலாம்."
"விஜய் பெரிய ஸ்டார். இதனை வருடங்களாக நம்மை entertain செய்து கொண்டிருக்கிறார். அவர் எனக்கு சீனியர். அவர் படம் இங்கே ரிலீஸ் ஆகிறது. என் படம் அங்கே ரிலீஸ் ஆகும்."
"நான் பீஸ்ட் கண்டிப்பாக பார்ப்பேன். விஜய் ரசிகர்கள் கேஜிஎப் 2 பார்பார்கள்" என யாஷ் கூறினார்.
குவியும் பாராட்டு
யாஷ் பேசி இருப்பது பற்றி தான் சினிமா துறையில் பலரும் பேசி கொண்டிருக்கின்றனர். சில நடிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் யாஷ் இப்படி பாசிடிவ் ஆக பேசி இருப்பது பற்றி தமிழ் நடிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அவர் மனதை தொட்டுவிட்டார் என நடிகர் ஹரிஷ் கல்யாண் ட்விட்டரில் கூறி உள்ளார்.
This speech by @TheNameIsYash gaaru is really heart warming .. super sir,well said. #Beast & #KGFChapter2 it is .. lets spread love & positivity ! I also love the way he respects his senior actors ❤️? pic.twitter.com/BdsafMClwp
— Harish Kalyan (@iamharishkalyan) March 28, 2022