வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து வசூல் விவரம்... செம கலெக்ஷன்
லப்பர் பந்து
பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் உருவாகி இருந்த படம் லப்பர் பந்து.
ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நாயகிகளாக நடித்துள்ளார்கள்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி இப்படம் திரைக்கு வந்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
படத்திற்கு விமர்சன ரீதியாக பாசிட்டீவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ள நிலையில் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது. படம் ரிலீஸ் ஆகி 3 நாள் முடிவில் ரூ. 3.5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
நல்ல கதைக்களம் கொண்டுள்ள இப்படம் வரும் நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
