நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் ஹரிஷ் கல்யாணின் திரைப்படம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஓ மணப்பெண்ணே.
அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
தெலுங்கில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பெல்லி சூப்பலு படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் தயாராகி உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் வருகிற அக்டோபர் 22ஆம் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Soup boy-a super boy aakkiya...Oh Manapenne ! #OhManapenneOnHotstar Streaming from 22nd October only on #DisneyPlusHotstarMultiplex pic.twitter.com/rjkIzTnHY9
— Disney+ Hotstar (@DisneyPlusHS) October 11, 2021