கவின் பட இயக்குனருடன் இணையும் நடிகர் ஹரிஷ் கல்யாண்.. வெளியான புது அப்டேட்
ஹரிஷ் கல்யாண்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் உருவாகி கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் லப்பர் பந்து.
இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
இதுவரை உலகளவில் ரூ. 23 கோடிக்கும் மேல் லப்பர் பந்து திரைப்படம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆவலுடன் அனைவரும் எதிர்ப்பார்க்கும் சூர்யாவின் கங்குவா பட இசை வெளியீட்டு விழா.. எப்போது வெளிவந்த விவரம்
புது படத்தின் அப்டேட்
இந்த படத்தை தொடர்ந்து, 'நூறு கோடி வானவில்', 'டீசல்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் ஷூட்டிங் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், அடுத்து ஹரிஷ் கல்யாண் நடிக்க போகும் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, கவின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று கொடுத்த 'லிப்ட்' திரைப்படத்தை இயக்கிய வினீத் வரபிரசாத்தின் இயக்கத்தில் ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் மலையாள நடிகர் செம்பன் வினோத் நடிக்கவுள்ளார் எனவும், இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் இருந்து தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
