நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணமா? பெண் யார்
நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அவர் தற்போது கைவசம் கசடதபற, ஓமணப்பெண்ணே போன்ற படங்களை வைத்து இருக்கிறார். அடுத்து சிவப்பு மஞ்சள் பச்சை இயக்குனர் சசி இயக்கத்தில் ஒரு படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார்.
தற்போது பிஸியான நடிகராக இருந்து வரும் ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்த்து வருகிறார்களாம். இன்னும் சில மாதங்களில் ஹரிஷ் கல்யாணுக்கு arranged marriage நடக்கலாம் என்றும் தகவல் பரவி வருகிறது.

சமீபத்தில் ஆதி - நிக்கி கல்ராணி, விக்னேஷ் சிவன் - நயன்தாரா போன்ற பிரபலங்கள் திருமணம் செய்த நிலையில் அந்த லிஸ்டில் அடுத்து ஹரிஷ் கல்யாண் இணைவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கொரோனா லாஃடவுன் காலகட்டத்தில் ஹரிஷ் கல்யாண் அளித்த பேட்டியில் தான் இன்னும் சில வருடங்களுக்கு திருமணம் செய்யும் திட்டம் இல்லை என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் தற்போது பரவும் தகவல் உண்மையா வதந்தியா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 
 
                                        
                                         
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    