இரண்டாம் திருமணம் செய்த ஹரிஷ் உத்தமன்! பெண் இவர்தான்.. வைரல் போட்டோ
நடிகர் ஹரிஷ் உத்தமன் தமிழ் சினிமாவில் நெகடிவ் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து பிரபலமாகி இருப்பவர். சின்ன பட்ஜெட் படங்களில் இருந்து அதிக பட்ஜெட் படங்கள் வரை அவர் நெகடிவ் ரோல்க்ளில் தோன்றி இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் அவரை அதிகம் பார்க்கலாம்.
கடந்த 2018ம் ஆண்டு ஹரிஷ் மும்பையை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அம்ரிதா கல்யாண்பூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்கள் ஒரே வருடத்தில் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் தற்போது ஹரிஷ் உத்தமன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டிருப்பதாக புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. மிக ரகசியமாக மற்றும் எளிமையாக ரெஜிஸ்டர் ஆபிசில் இந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது.
சின்னு குருவில்லா என்பவரை தான் ஹரிஷ் இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.
