இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் ஹர்காரா- ரிலீஸ் தேதி அறிவிப்பு

By Yathrika Aug 02, 2023 05:19 AM GMT
Report

ஹர்காரா படம்

இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகில், தொடர்ந்து தரமான வெற்றி திரைப்படங்களை தந்து வருவதன் மூலம் மிகப்பெரும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் ஹர்காரா- ரிலீஸ் தேதி அறிவிப்பு | Harkara Movie Release Date Announcement

தரமான திரைப்படங்களை தயாரிப்பதோடு, இளம் திறமையாளர்களின் நல்ல படைப்புகளை தேடி வெளியிட்டு, ஆதரவளித்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் புதுமையான களத்தில் அருமையான படைப்பாக உருவாகியுள்ள “ஹர்காரா” திரைப்படத்தினை ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ நடித்து இயக்கியிருக்கும் “ஹர்காரா”, இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் வித்தியாசமான படமாகும். இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார்.

இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் ஹர்காரா- ரிலீஸ் தேதி அறிவிப்பு | Harkara Movie Release Date Announcement

நாயகியாக கௌதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

மனதை மயக்கும் அழகான டிரமாவாக உருவாகியுள்ள “ஹர்காரா” படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.  

இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் ஹர்காரா- ரிலீஸ் தேதி அறிவிப்பு | Harkara Movie Release Date Announcement

திடீரென விற்கப்படும் விஜய் டிவி- போட்டிபோடும் 3 நிறுவனம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US