இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? அழகிய புகைப்படம் இதோ
ஹாரிஸ் ஜெயராஜ்
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்னலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
[C27O2R ]
இதைத் தொடர்ந்து காக்க காக்க, வாரணம் ஆயிரம், கோ, நண்பன், துப்பாக்கி, அந்நியன், அயன் எனப் பல சூப்பர்ஹிட் படங்களின் வெற்றிக்குத் தனது இசையின் மூலம் துணையாக நின்றார். 90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த டாப் இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர்.
இவர் இசையில் கடைசியாக பிரதர் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், பாடல்கள் ஹிட்டானது. குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற மக்காமிஷி எனும் பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாரிஸ் ஜெயராஜின் குடும்பம்
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த 1999ஆம் ஆண்டு சுமா ஜெயராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்தப் புகைப்படம்: