ஏழைகளுக்கு ஓடிஓடி போய் உதவும் யூடியூபர் ஹர்ஷா சாய் வருமானம்.. எவ்வளவு தெரியுமா?
ஹர்ஷா சாய்
யூடியூப் வீடியோக்கள் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளார்கள்.
ஆனால் நாம் இப்போது பார்க்கப்போகும் பிரபலம் யூடியூப் மூலம் பிரபலம் ஆனாலும் எல்லோரின் பாராட்டுக்களையும் பெற்ற ஒருவர். 23 வயதான ஹர்ஷா சாய் என்பவரை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.
அறிமுகம்
கல்லூரி முடித்த பின்னர் தனியே யூடியூப் சேனல் தொடங்கி உடற்பயிற்சி வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்தார், இதனால் Subscribers வரத் தொடங்கினர்.
ரூ. 4 லட்சம் காரை 5 ரூபாய் நாணயம் கொடுத்து வாங்கி அதனை யூடியூப் வெளியிட்டார், பின் பேய் வீட்டில் தங்குவது போன்ற வீடியோக்களை அவர் வெளியிட இந்த வீடியோக்கள் மூலம் அதிகப்படியான பாலோவர்களை பெற்றார்.
உதவிகள்
யூடியூப் மூலம் வரும் வருமானத்தை மக்களுக்கு செலவிட நினைத்தவர் சிறுவனுக்கு சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்தார். அதன்பின் ஏழை குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டி கொடுப்பது, பல ஆயிரம் பேருக்கு டேங்க் புல்லாக பெட்ரோல் போட்டு கொடுத்தார்.
அதேபோல் ரூ. 1 லட்சம் ஏழைகளுக்கு 5 நட்சத்திர ஹோட்டலில் உணவளித்து பெரும் புகழ் பெற்றார்.
இது தவிர தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏழைகளுக்கு ஐந்து நட்சத்திர விடுதியில் உணவு வசதி செய்து தருவதாக உறுதியளித்து ஆச்சரியப்படவைத்துள்ளார்.
வருமானம்
மக்களால் கொண்டாடப்படும் ஹர்ஷா சாய் 3 முக்கிய யூடியூப் சேனல்களை நடத்துகிறார். இந்த சேனல்கள் அனைத்தும் சேர்ந்து சுமார் 30 மில்லியன் Subscriber கொண்டுள்ளன.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி ஹர்ஷா சாய்யின் நிகர மதிப்பு 15-20 கோடி என கூறப்படுகிறது.

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
