அமலா பாலை இந்த கெட்டப்பில் பார்த்திருக்கிறீர்களா? மிரட்டலான லேட்டஸ்ட் லுக் - இதுவரை இல்லாத ஒன்று!

Amala Paul web series
By Balakumar Dec 24, 2020 05:29 PM GMT
Report

நடிகை அமலா பாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஆடை. இப்படத்தில் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

இதற்கிடையில் அமலா பால் பாலிவுட் படத்தில் நடிப்பதாகவும், பாலிவுட் பாடகர் பவிந்தர் சிங் என்பவரிடம் காதல் கொண்டுள்ளதாகவும், நிச்சயதார்த்தம், திருமணம் முடிந்துவிட்டதாக புகைப்படங்களும் வெளியானது.

ஆனால் அமலா பால் திருமணம் முடியவில்லை, தன்னுடைய அனுமதி இல்லாமல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது என பவீந்தர் சிங் மீது நீதிமன்ற வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது வெப் சீரிஸிலும் நடிக்க தொடங்கியுள்ளாராம். தெலுங்கில் Kudi Yedamaithe பெயரில் 8 பகுதிகளை கொண்ட திகில் கதையாக இத்தொடர் உருவாகிறதாம். இதில் அமலா பால் போலிஸ் அதிகாரியாக வருகிறார். பவன் குமார் இப்படத்தை இயக்க ராகுல் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

இத்துடன் அமலா பால் தற்போது சொந்த தயாரிப்பில் கடாவர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மலையாளத்தில் ஆடுஜீவிதம், தமிழில், அதோ அந்த பறவை போல, தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரிஸ் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறாராம்.

ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் ஹீரோவான இருந்த படத்தில் அமலா பால் போலிஸ் அதிகாரியாக வந்தது தற்போது நினைவிற்கு வரும் தானே.

தெலுங்கில் இதுவரை ரசிகர்களுக்கு இல்லாத புது அனுபவமாக இந்த Kudi Yedamaithe வெப் சீரிஸ் இருக்கும் என கூறியுள்ளனர்.  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US