அவர் பெரிய சூப்பர்ஸ்டார்.. பிக் பாஸ் சர்ச்சைக்கு நடுவில் விஜய் பற்றி பேசிய விஜய் சேதுபதி
சமீபத்தில் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யை தாக்கி பேசியதாக சர்ச்சை வெடித்தது. அவர் விஜய் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அவர் பேசிய விஷயங்கள் விஜய் ரசிகர்களை கோபமடைய வைத்தது.
அதனால் விஜய் சேதுபதியை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
அவர் சூப்பர்ஸ்டார்..
இந்நிலையில் விஜய் சேதுபதியின் பத்தா இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் விஜய் பற்றி விஜய் சேதுபதி பேசி இருக்கிறார்.
"நான் சஞ்சய் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி இருந்தேன். அதன்பின் விஜய் எனக்கு போன் செய்து பேசினார். 'நண்பா ரொம்ப நன்றி.. அவன் சந்தோசமாக இருந்தான்' என கூறினார்.
அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவரே ஒரு பெரிய சூப்பர்ஸ்டார். சஞ்சய்க்கு என்னை பிடித்து இருக்கிறது என்பது பெரிய ஆச்சர்யம். அதை அவனிடமே கூறி இருக்கிறேன். 'ஏண்டா வீட்ல எவ்ளோ பெரிய ஆளை வெச்சிருக்க' என சொல்வேன்.
தங்கமான பையன். அவனது படமும் எங்களுடன் வருகிறது. அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். கியூட் fellow" என விஜய் சேதுபதி பேசி இருக்கிறார்.
#VijaySethupathi about #ThalapathyVijay at #Baththa event:
— Laxmi Kanth (@iammoviebuff007) September 18, 2026
“I wished Sanjay on his birthday. He called me and said, ‘Nanba, romba nandri. Avan sandhosama irundhan.’ I didn’t expect that because he’s a big superstar, and I was surprised that Sanjay liked me. I told him, ‘Hey,…