கொரோனா குமார் படத்தின் ஹீரோ யார் தெரியுமா! அட, இவரா.. நீங்களே யாருனு பாருங்க
ரௌத்திரம் எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கோகுல். இதன்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா எனும் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை இயக்கினார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். பின்னர் காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கிய கோகுல், அடுத்ததாக ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்க உள்ளார்.
இதில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்பதை படக்குழு அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் ஒரு சூப்பர் தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம் கொரோனா குமார் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்காக தனது சம்பளத்தில் இருந்து 25% சதவீதத்தை குறைத்துள்ளாராம் சந்தானம் என்றும் தற்போது கூறப்படுகிறது.