மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது, இந்த நடிகர் தானாம்..! யார் தெரியுமா?
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
மேலும் 100% இருக்கைகளுடன் தமிழகத்தில் வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படம், மத்திய அரசின் உத்தரவை அடுத்து 50% இருக்கைகளுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் திரைக்கதை எழுதியுள்ள ரத்னகுமார் மற்றும் போன் பார்த்திபன், மாஸ்டர் படம் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளனர்.
ஆம், இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள பவானி கதாபத்திரத்தில் முதலில் தெலுங்கு நடிகர் நானி மற்றும் மாதவன் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்களாம்.
மேலும் இது குறித்து நடிகர் மாதவனிடம் கேட்ட போது அவர் அவரின் திரைப்பட இயக்கத்தில் பிஸியாக இருந்தார்” என ஒரு பேட்டியில் கூறியுள்ளனர்.