கே.ஜி.எப் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவர் தானாம்.. யாஷ் கிடையாதாம்.. யார் அந்த ஹீரோ தெரியுமா
பிரஷாந்த் நீல் என்பவரின் இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரம் யாஷ் நடிப்பில் வெளியான படம் கே.ஜி.எப்.
முதல் பாகம் யாரும் எதிர்பார்த்த விதத்தில் இந்தியளவில் மிகப்பெரிய வெற்றியை கண்டது.
அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி விரைவில் வெளியாகவுள்ளது.
மேலும் சமீபத்தில் தான் கே.ஜி.எப் 2 படத்தின் டீசர் வெளியாகி உலகளவில் மாபெரும் சாதனை புடைத்திருந்தது.
இந்நிலையில் கே.ஜி.எப் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது தெலுங்கு முன்னணி நடிகர் பிரபாஸ் தானாம். யாஷ் கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் நடிகர் பிரபாஸை மனதில் வைத்து தான் கே.ஜி.எப் படத்தின் கதையை எழுதினாராம் இயக்குனர் பிரஷாந்த் நீல்.
ஆனால் அவரிடம் கதை முடியாத நிலையில், இந்த கதையை யாஷ் கேட்டு ஓகே செய்தார் என்று கூறப்படுகிறது.
இதனால் தான் பிரஷாந்த் நீல் தற்போது இயக்கவிருக்கும் சலார் படத்தில் பிரபாஸ் ஹீரோவாகியுள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.