கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா இதையெல்லாம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டாரா?
நடிகை சமந்தா
எந்த துறையாக இருந்தாலும் ஒருவருக்கு என்று ஒரு காலம் வரும், அந்த நேரத்தில் நமது முழு உழைப்பையும் போட்டு வெற்றிப்பெற்றால் தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும்.
அப்படி சினிமா துறையில் நடிகை சமந்தாவிற்கும் ஒரு காலம் வந்தது, அதை அவர் பயன்படுத்தி தொடர்ந்து நல்ல நல்ல படங்கள் நடித்து வெற்றியும் கண்டார்.
வேகமாக பயணம் செய்த அவர் வாழ்க்கையில் வந்த சோகம் தான் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கினார்.
சிகிச்சை எடுத்து வந்தும் முழுமையாக குணமடையவில்லை. இதையடுத்து அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதற்காக சென்று இருக்கிறார், படங்களில் நடிப்பதையும் தற்காலிகமாக நிறுத்தி உள்ளார்.

உணவு பழக்கம்
உடல்நிலை பாதிப்பு காரணமாக உணவு பழக்க வழக்கங்களை சமந்தா முழுமையாக மாற்றி இருக்கிறார், விரும்பி சாப்பிட்டு வந்த உணவு வகைகளை நிறுத்தி உள்ளார்.
குறிப்பாக நோயை தீவிரப்படுத்தும் உணவு வகைகளான நட்ஸ், உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைகள், பால், பிரெட் உள்ளிட்ட உணவுகளை முழுமையாக தவிர்த்து விட்டார்.
இந்த நிலையில் தற்போது ஒரு வருடம் நான்கு மாதங்களுக்கு பிறகு தனக்கு விருப்பான பிரெட்டை பட்டருடன் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
