விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் ஹார்ட் பீட் வெப் தொடர்.. எந்த நேரத்தில் தெரியுமா?
Heart beat web series in Vijay tv: ஹார்ட் பீட் வெப் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்ப்போம்.
ஹார்ட் பீட்
ஜியோ ஹாட்ஸ்டாரில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய வெப் சீரிஸ் ஹார்ட் பீட். தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான இந்த வெப் சீரிஸில் தீபா பாலு, அனுமோல், சாருகேஷ், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து கடந்த 2025-ஆம் ஆண்டு ஹார்ட் பீட் சீசன் 2 ஆரம்பமானது. இதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் 3-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 50 எபிசோட்களை கடந்துள்ள ஹார்ட் பீட் சீசன் 3-க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சீசன் 3
ஆர்.கே. மருத்துவமனை மீண்டும் அர்ஜுன் கைக்கு வந்துவிட்டது. ஆனால், தான் CEO ஆகாமல், விஜயை CEO ஆக்கியுள்ளார். மேலும் ரீனா மீண்டும் ஆர்.கே மருத்துவமனையில் மருத்துவராக சேர்ந்துவிட்டார். அம்மா ரதி சீனியர் மருத்துவர், அப்பா CEO; இதற்கிடையில் ரீனா என்ன செய்வதென்று தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு
இந்த நிலையில், நாளை முதல் திங்கள் - வெள்ளி வரை மாலை 4.00 மணி - 5.00 மணி வரை ஹார்ட் பீட் சீசன் 1 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
