விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா
ரோலக்ஸ்
கமல் ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வெளிவந்த விக்ரம் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பதை அனைவரும் அறிவோம். அப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணங்களில் ஒன்றாக சூர்யாவின் ரோலக்ஸ் கேமியோ மிகப்பெரிய அளவில் உதவியது.

ஹீரோ கேமியோ
எப்படி விக்ரம் படத்தில் ரோலக்ஸ் திரையரங்கை தெறிக்க வைத்ததோ, அதே போல் கூலி திரைப்படத்திலும் முன்னணி ஹீரோ ஒருவர் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வேறு யாருமில்லை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும் பிரபல நடிகருமான சிவகார்த்திகேயன்தான் கூலி படத்தில் நடித்துள்ளாராம். அதுவும் இளம் வயது ரஜினிகாந்த் ரோலில் சிவா நடித்துள்ளதாக லேட்டஸ்ட் Buzz கூறப்படுகிறது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அவருடைய கேமியோ திரையில் வரும்போது, திரையரங்கம் தெறிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம் ஆகஸ்ட் 14ம் தேதி என்ன நடக்கப்போகிறது என்று.
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri