விஜய் டிவியின் சக்திவேல் சீரியலில் ஹீரோ திடீர் மாற்றம்... அவருக்கு பதில் இனி இவர்தானா?
சக்திவேல்
விஜய் டிவியில் கடந்த 2023ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் சக்திவேல்.
பிரவீன் மற்றும் அஞ்சலி பாஸ்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவந்த இந்த சீரியல் ரசிகர்களின் பேவரெட் தொடராக தான் உள்ளது. 500 எபிசோடுகளை தாண்டி சீரியல் ஓடிக் கொண்டிருக்க தொடர் முடியப்போகிறது என நிறைய முறை வதந்திகள் வந்துவிட்டது.
ஆனால் இப்போது தொடரில் முக்கிய விஷயம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றம்
அதாவது தொடரில் வேலுவாக நடித்துவந்த பிரவீன் ஆதித்யா திடீரென தொடரில் இருந்து விலகியுள்ளார். இவர் தனது அண்ணன் தென்னரசை கொன்றதிர்காக ஜெயிலுக்கு செல்கிறார், அதுவே அவரது கடைசி காட்சி.
தற்போது சீரியலில் புதிய வேலுவாக ஆஹா கல்யாணம் சீரியல் புகழ் விக்ரம்ஸ்ரீ நாயகனாக இனி நடிக்க உள்ளார். அவரது என்ட்ரி இன்றைய எபிசோடில் வருகிறது.