நமது டாப் ஹீரோஸ் தோல்விக்கு பின் Comeback கொடுத்த திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா?

Vijay STR Movies Ajith Maanadu
By Jeeva Nov 25, 2021 05:40 PM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களாக இருப்பவர்கள் தங்களின் கடினமான திரைப்பயணத்தில் தோல்வி படங்களுக்கு பிறகு பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் யாரெல்லாம் அப்படி பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்துள்ளது என்பதை தான் பார்க்கவுள்ளோம். 

1. எந்திரன்  

2008 ஆம் ஆண்டு ரஜினி நடித்த குசேலன் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானாலும் எதிர்மறையான விமரசனங்களை படுதோல்வி அடைந்தது. ரஜினியின் உண்மையான கதையை கலந்து அப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்களின் ஆதரவை பெற தவறியது.

இதன்பின் 2010 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் வெளியான எந்திரன் திரைப்படம் எதிர்பார்த்தது போலவே அனைத்து தமிழ் திரைப்படங்களின் முந்திய வசூல் சாதனைகளை முறியடித்து அதிக வசூல் சாதனை செய்த தமிழ் திரைப்படமாக எந்திரன் அமைந்தது. 

நமது டாப் ஹீரோஸ் தோல்விக்கு பின் Comeback கொடுத்த திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா? | Hero Comeback Article

2. வேட்டையாடு விளையாடு  

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தாலும் பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய வசூலை பெற தவறி தோல்வியடைந்தது.

பின் கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் 2006-ல் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. தீவிர கமலின் ரசிகரான கவுதம் மேனன் கமலை வைத்து பிளாக் பஸ்டர் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்தார்.

 நமது டாப் ஹீரோஸ் தோல்விக்கு பின் Comeback கொடுத்த திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா? | Hero Comeback Article

3. துப்பாக்கி  

போக்கிரி படத்திற்கு பின் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த விஜய், அவரின் ரசிகர்களுக்கு பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுக்க தவறி கொண்டே இருந்தார்.

பின்னர் 2012 ஆம் ஆண்டு முதன்முறையாக இயக்குனர் AR முருகதாஸ் உடன் கூட்டணி வைத்த விஜய் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் துப்பாக்கி மிக பெரிய பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்தார். 

நமது டாப் ஹீரோஸ் தோல்விக்கு பின் Comeback கொடுத்த திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா? | Hero Comeback Article

4. விஸ்வாசம்  

இயக்குனர் சிவா உடனான தொடர் கூட்டணியில் வெளியான விவேகம் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. மீண்டும் சிவாவுடன் இணைவே கூடாது என ரசிகர்கள் கூறிவந்த நிலையில் தான்.

நான்காவது முறையாக சிவா - அஜித் கூட்டணியில் வெளியானது விஸ்வாசம் திரைப்படம், எதிர்பார்த்தை விட மாபெரும் வெற்றியடைந்த விஸ்வாசம். அஜித்தின் திரைப்பயணத்தில் பெரிய வசூல் படைத்த திரைப்படமாக அமைந்தது. 

நமது டாப் ஹீரோஸ் தோல்விக்கு பின் Comeback கொடுத்த திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா? | Hero Comeback Article

5. அசுரன் 

2018 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வட சென்னை மற்றும் மாரி 2 உள்ளிட்ட இரண்டு திரைப்படங்கள் வெளியானது. இதில் முதலில் வட சென்னை வெளியாகி தனுஷுக்கு பெயரை பெற்று தர அதன்பின் வெளியான மாரி 2 பாக்ஸ் ஆஃபீஸில் சொதப்பியது.

பின்னர் மீண்டும் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம், அதுவரை வெளியான தனுஷின் திரைப்படங்களை மிஞ்சுமளவு வசூல் சாதனை படைத்தது அசுரன். இப்படத்திற்காக தேசிய விருதையும் தனுஷ் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நமது டாப் ஹீரோஸ் தோல்விக்கு பின் Comeback கொடுத்த திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா? | Hero Comeback Article

6. மாநாடு  

கடந்த 10 வருட காலமாக சிம்புவிற்கு சொல்லிக்கொள்ளும் அளவு வசூல் சாதனை படைத்து பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படங்கள் எதுவுமில்லை. சிம்பு நடித்த எந்த திரைப்படங்களும் பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என ரசிகர்களுக்கும் தெரியும்.

இப்படி இருக்கையில் தான் வெளியாகியுள்ளது மாநாடு சிம்பு இதுவரை நடித்த திரைப்படங்களில் முற்றிலும் மாறுபட்ட படமாக வெளியாகியுள்ளது மாநாடு. வெளியானது முதல் பிளாக் பஸ்டர் ரிப்போர்ட்களை பெற்று வரும் மாநாடு நிச்சயம் Box Office-யில் சாதனை படைத்து. STR-ன் மிக பெரிய Comeback-ஆக அமையும். 

நமது டாப் ஹீரோஸ் தோல்விக்கு பின் Comeback கொடுத்த திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா? | Hero Comeback Article



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US