ஹே ராம் - படம் பார்த்து கதை சொல்
ஹே ராம் கமல் ஹாசனின் உலகத்தர படைப்புகளில் ஒன்று. 2000ஆம் ஆண்டு இப்படம் வெளியானபோது, கமல் ஹாசன் சந்திக்காத அவமானங்கள் இல்லை. ஆனால், வருடங்கள் ஓடஓட இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட துவங்கினார்கள். கடந்தாண்டு கூட, இப்படத்தின் 20ஆம் ஆண்டு விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
அப்படி, ஏன் இப்படம் 2000-தில் வெற்றியடையவில்லை, இப்போது எப்படி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஏனென்றால், இப்படத்தில் உள்ள அணைத்து விஷயங்களையும் இயக்குனர் கமல் ஹாசன், குறியீடுகளாவே காட்டியிருப்பார். அது சிலருக்கு புரிந்திருந்தாலும், பலரும் புரியாமல் போனது.
அதுவே இப்படத்தின் தற்காலிக தோல்விக்கு காரணமாக அமைந்தது. அப்படி, ஹே ராம் படத்தில் கமல் ஹாசன் என்னென்ன விஷயங்களை ஒளித்து வைத்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா.. வாங்க பார்க்கலாம்..
" ஹே ராம் "
இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்று நிகழ்வின் மறுபக்கத்தை காட்டிய படம் ஹே ராம். இந்தியாவிற்கு அகிம்சை வழியில் சுதந்திரம் வாங்கி தந்த, மகாத்மா காந்தி அவர்களை கொள்ள நினைத்த பலரில் ஒருவன், சாகேத் ராம்.
1. படத்தின் துவக்கத்தில் ஹே ராம் எனும் டைட்டிலுக்கு பின் 'ரகுபதி ராகவ ராஜா ராம்' எனும் ஹிந்துக்களின் தெய்விக பாடல், கமல் ஹாசனின் குரலில் ஒழிக்கும். ஆனால், கொஞ்சம் மாறுபட்டு, இஸ்லாமியர்கள் தொழுவது போல் இப்பாடல் ஒழிக்கும்.
2. திரைக்கதையின் துவக்கம் 1999ல், சாகேத் ராமின் மரண படுக்கையில் இருந்து ஆரம்பம் ஆகிறது. சாகேத் ராமின் பேரன் ' தனது தாத்தா சாகேத் ராமூக்கு எப்போதும் இருட்டு தான் பிடிக்கும் ' என்று கூறுகிறார். ஆனால், காந்திக்கு ' தூங்கும் போதும் லைட் எரிந்துகொண்டே தான் இருக்க வேண்டும் ' என்று சாகேத் ராமின் மருத்துவர் கூறுகிறார். இதிலிருந்தே இருவரும் வெவ்வேறு துருவங்கள் என்று காட்டப்படுகிறது.
3. ஒரு கதையை 'ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார்' என்று சாகெத் ராம் கூறமாட்டார். 'நான் இருந்த ஊரில் ஒரு ராஜா இருந்தார்' என்று தான் சாகெத் ராம் கூறுவார் என்று, சாகேத் ராமின் பேரன் கூறுவார். இதிலிருந்தே, இப்படம் சாகேத் ராமின் கண்ணோட்டத்தில் மட்டுமே நகர்கிறது என்று இயக்குனர் கமல் காட்டுகிறார்.
4. படத்தின் முதலில் வரும் 'ராமன் ஆனாலும் பாபர் ஆனாலும்' எனும் பாடலில் மதவேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக, காட்டியிருப்பார் கமல் ஹாசன். அதற்கு முக்கியமாக இளையராவிற்கு ஒரு நன்றி..
5. Direct Action day - 1946ஆம் ஆண்டு ஆகேஸ்ட் 16 தேதி நடந்தது.
அதாவது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன். அப்போது பாகிஸ்தானை இந்தியாவில் இருந்து பிரிக்கும்படி கேட்டு, முகம்மது அலி ஜின்னா, இந்திய இஸ்லாமியர்களை பந்த் செய்ய சொன்னார். அப்போது தான், இந்தியாவை அடிமையாக்கி வைத்திருக்கும் பிரிட்டிஷுக்கு, நம்முடைய பலம் என்னவென்று தெரியும் என்ற நோக்கத்துடன் இதனை ஜின்னா செய்தார்.
ஆனால், அந்த பந்தில் சில, தவறான நபர்கள் புகுந்து, கலவரத்தை உண்டாகி, கொலை,கொள்ளை, கற்பழிப்பு போன்ற தவறான விஷயங்களின் ஈடுபட்டனர். இந்த Direct Action day, என்ற வரலாற்று நிகழ்வை தான், கமல் ஹாசன் ஹே ராம் படத்தில் கண்முன் நிறுத்தினார். அந்த Direct Action day-வில், சாகேத் ராம் தன்னுடைய காதல் மனைவி அபர்ணாவை இழப்பார். தன் மனைவியின் மரணத்திற்கு காரணமான அனைவரையும் கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கும் சாகெத் ராம், அதனை செய்தும் முடிப்பார். ஆனால் அதன்பின், கோபத்தில் கொலை செய்த சாகேத் ராம், அபயங்கரின் சந்திப்பால், மதவெறிக்கு ஆளாவார்.
6. இதன்பின், தனது மனைவியை இழந்து, மதம் பிடித்த யானை போல் மனிதர்களை கொள்ளும் வேட்டையில் சாக்கேத் ராம் ஈடுபட்டிருப்பார். மற்றொரு புறம், மதம் பிடித்த யானை ஒன்று தனது பாகனை இழந்து, தெருவில் அலைந்துகொண்டிருக்கும்.
அங்கிருந்து அப்படியே கட் செய்தால், தனது இரண்டாம் திருமணத்திற்கு பெண் பார்க்க செல்லும் கமல் ஹாசன் கோவில் அருகே யானை ஒன்றை பார்ப்பார். அப்போது யானையின் கால்கள் கட்டப்பட்டு இருக்கும். அதே போல், சாக்கேத் ராமூக்கு கால் கட்டு போடுவதற்கு தான், தற்போது சென்றுகொண்டு இருக்கிறார்கள் என்பதை அதில் மறைமுகமாக கமல் ஹாசன் காட்டியிருப்பார்.
7. மைதிலியை பெண் பார்க்கும் செல்லும் கமல் ஹாசனுக்கு உடனடியாக திருமணமும் நடைபெறும். திருமணத்திற்கு பின் கல்யாண சடங்குகள் ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்க, மற்றொரு புறம், மொட்டை மாடியில் அமர்ந்து, 'எனக்கு இங்கு திருமணம் நடக்கிறது. ஆனால், டெல்லியில் பெரிய விவாகரத்து நடக்கிறது' என்று கூறுவார். அன்று தான் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே பிரிவு ஏற்பட்டதை தான், சாகேத் தாம் அப்படி கூறுவார்.
8. மனைவி மைதிலியுடன் விமானத்தில் செல்லும் சாகேத் ராம், மைதிலியிடம் காந்திக்கு எதிரான வாதங்களை முன் வைப்பார். சாகேத் ராம் ஒரு புத்தகத்தை மறைத்துவைத்து படிப்பார், அப்போது மைதிலி 'கெட்ட வார்த்தை புத்தகமா' என்று கேட்பார். அதற்கு சாகேத் ராம் ' சில விஷயங்கள் மூடி, மறைந்து இருப்பதே நல்லது' என்று கூறுவார். அப்போது மைதிலி 'காந்தி எதையும் மூடி மறைக்கக்கூடாது என்று சொல்கிறாரே' என்று கூறுவார். அதற்கு சாகேத் ராம் ' மூடி மறைத்தாலும், உன் ஆடை நன்றாக இருக்கிறது' என்று கூறுவார்.
9. மருத்துவமனையில் அபயங்கரை சந்திக்க செல்லும் சாக்கேத் ராமிடம், அபயங்கர் ஒரு பார்சலை தனது நெஞ்சில் வைத்து பிரிக்க சொல்வார். அந்த பார்சலில், ஒரு துப்பாக்கி இருக்கும். அப்போது அந்த காட்சியில் ஹனுமானின் புகைப்படத்தையும், காட்டுவார்கள். இதனை வைத்து பார்க்கும் பொழுது, ஹனுமான் நெஜுக்குள் ராமர் இருப்பதுபோல், அபயங்கர் நெஞ்சில் பழிவாங்கும் எண்ணமும், வன்மமும் தான் இருக்கும் என்று காட்டிற்யிருப்பார்கள்.
10. குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேறி சாகேத் ராம் துறவறம் ஏற்கிறார். அப்படியோரு காட்சியை கமல் ஹாசன் காட்டாதவரை தமிழ் சினிமாவில் வரவில்லை என்று கூறுகின்றனர்.
11. காந்தியை கொள்ள டெல்லிக்கு செல்லும் சாகேத் ராம் அங்கே ஒரு ஹாட்டலில் 'கே. பைரவ்' எனும் பெயரில் புக் செய்கிறார். அந்த கே. பைரவ் ' கால பைரவரை ' குறிக்கிறது. கால பைரவரை போல் தனது மீசைகூட, முறுக்குமீசையாக மாற்றியிருப்பார் சாகேத் ராம்.
12. டெல்லியில் காந்தி ஜீ தங்கியிருக்கும் 'பிர்லா ஹவுஸ்-க்கு' செல்வார் சாகெத் ராம். { படத்தில் மறைந்துள்ள மிகப்பெரிய சரித்திர நிகழ்வு இதுதான் }. ஆம் ஏனென்றால், அந்த நாளில் தான், காந்தியை கொள்ள கோட்சே தனது நண்பர்களுடன் முயற்சி செய்துள்ளார். அந்த முயற்சியில் மொத்தம் 7 நபர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆம், நாதுராம் கோட்சே, கோபால் கோட்சே, மதன்லால், நாராயணன் அப்டே, பட்ஜெம் சங்கர், கார்க்ரே. இவர்களை தவிர்த்து, இவர்களுக்கு உறுதுணையாக சாவர்க்கர் மற்றும் பாச்ரே உதவியுள்ளனர்.
ஆனால், இவர்கள் அனைவரும் இணைந்து போட்ட இந்த கொலை முயற்சி திட்டம், அப்போது வீணாக போனது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக கொண்டே, இந்த கொலை முயற்சி சொதப்பலை, தன்னுடைய கற்பனை கதாபாத்திரமான சாகேத் ராம் மூலம் நடந்திருந்தால் எப்படி இருக்கும், என்று எண்ணி இந்த காட்சியை காட்டியிருப்பார் இயக்குனர் கமல் ஹாசன்.
13. துப்பாக்கியை துளைத்துவிட்டு, அதை தேட இஸ்லாமியர்கள் வசிக்கும் இடத்திற்கு செல்லும் சாகேத் ராம், தன்னுடைய உயிர் தோழன் அம்ஜத்தை பல நாட்கள் கழித்து சந்திக்கிறார். ஆனால், தனது தோழனை சந்தித்துவிட்டோம் என்ற, ஒரு சந்தோசம் இல்லாமல், வன்மத்துடன் பார்க்கிறார். ஏனென்றால், அம்ஜத் தற்போது நண்பன் கிடையாது. ஒரு இஸ்லாமியர் என்று பார்க்கிறார் சாகேத் ராம். இதன்முலம், மிக ஆழமான மதவாதியாக சாகேத் ராம் மாறியுள்ளார் என்று தெரிகிறது.
14. துப்பாக்கி தனது கைக்கு வந்தவுடன், சாகேத்திடம் என்னால் மட்டும் தான் உன்னை காப்பாற்ற முடியும் என்று அம்ஜத் கூறுவார். ஆனால் அப்போது, கையில் துப்பாக்கியை ஏந்தியபடி, 'நானே தப்பித்து கொள்வேன்' என்று சாகேத் ராம் கூறுவார். இந்த கொலைவெறிக்கு காரணம் 'அபர்ணாவின் இறப்பு தானா' என்று சாகேத் ராமிடம், அம்ஜத் கேட்பார். அதற்கு சாகேத் ராம், ' அபர்ணா இறக்கவில்லை, சில முஸ்லிம்கள் சேர்ந்து, கொன்றுவிட்டார்கள்' என்று கூறுவார்.
அதற்கு அம்ஜத் 'எங்க அப்பாவையும் ஒரு இந்து தான் கொன்னான். அதற்கு நீ என்ன சொல்ல போகிறாய்' என்று கேட்பார். அப்போது சாகேத் ராம் ' எல்லா முஸ்லிம்களும், உங்க ஜின்னாவோட பாகிஸ்தான் போகவேண்டியது தானே' என்று கேட்பார். அதற்கு அம்ஜத் 'ஜின்னாவின் சொந்த மகளே இந்தியா தான், என்னுடைய நாடு என்று இருக்காங்க. நான் காந்தியோட மகன். இங்க தான் இருப்பேன்' என்று அம்ஜத் கூறுவார்.
அப்போது அம்ஜத், சாகேத் ராமிடம், 'உனக்கு ஒரு முஸ்லிமை கொள்ளும் சந்தோஷத்தை நான் தருகிறேன். ஆனால், இதற்கு பின் வேறு யாரையும் நீ கொள்ளக்கூடாது என்று சத்தியம் செய்' என்று அம்ஜத் கேட்பார். அதற்கு சாகேத் ராம் 'நான் உன்னை கொள்ள வரவில்லை. இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் " Mr. மோகன்தாஸ் கரமச்சந் காந்தியை" கொள்ள வந்துருகிறேன்' என்று கூறுவார்.
15. இதன்பின், இந்து மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே ஏற்படும் கடும் துப்பாக்கி சூட்டில், அம்ஜத்தின் நண்பர்கள் உயிரிழக்கிறார்கள். அதே சமையம் தனது நண்பன் அம்ஜத் உயிரை காப்பாற்ற, இந்துக்களை எதிர்த்து துப்பாக்கி சூடு செய்கிறார் சாகேத் ராம். மருத்துவமனையில், மரண படுக்கையில் இருக்கும் அம்ஜத்திடம், 'பைரவ் என்பவரை பார்த்துள்ளீர்களா' என்று போலீஸ் கேட்பார்கள். அதற்கு அம்ஜத், ' அந்த மிருகத்தை இதற்கு முன்னாள் நான் பார்த்ததில்லை' என்று கூறுவார். இந்த இடம் தான் சாகேத் ராமை முழுமையாக மாற்றுகிறது. நண்பன் அம்ஜத்தின் மரணம், சாகேத் ராமை மத வெறியில் இருந்து விடுபட செய்கிறது.
16. மனம் திருந்தி காந்தியை பார்க்க செல்லும் சாகேத் ராமிடம், காந்தி ' என்னை அனைவரும் மகாத்மா என்று சொல்கிறார்கள். நான் மகாத்மாவா..?' என கேட்பார். அதற்கு சாகேத் ராம் ' நான் உங்களை மகாத்மா என்று கூறினால், அதனை நீங்கள் மாருப்பீர்கள். அதன்பின், நான் அதனை மாருப்பேன்' என்று கூறுவார். இந்த விஷயத்தின் மூலம் சாகேத் ராம், எந்த அளவிற்கு மாறியிருக்கிறார் என்று தெரியவருகிறது.
17. இதன்பின், காந்தியிடம் மன்னிப்பு கேட்க சாகேத் ராம் செல்கிறார். ஆனால், அப்போது பிராத்தனைக்கு நேரம் ஆகிறது. ஏற்கனவே நான் தாமதமாக செல்கிறேன். அந்த தாமதத்திற்கு அனைவரிடமும் நானும் பண்ணிப்பு கேட்க வேண்டும் என்று சாகேத் ராமிடம் சொல்லிவிட்டு, பிராத்தனை மேடையை நோக்கி காந்தி செல்லும் பொழுது, அங்கிருந்த கோட்சே, காந்தியை தனது துப்பாக்கியால் சுட்டு கொள்கிறார். இதில் என்ன Hidden Detail இருக்கிறது என்று கேட்டால். ஆம் இதிலும் ஒரு விஷயத்தை ஒளித்து வைத்துள்ளார் கமல்.
காந்தி, தான் இருக்கும் தருவாயில் 'ஹே ராம்' என சொல்லவிட்டு சாகவேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் கோட்சே, காந்தியை சுட்ட நேரத்தில், 'ஹே ராம்' என்று இறுதியில் சொன்னாரா..? இல்லையா..? என்பதே யாருக்கும் தெரியவில்லை. இதற்காக ஒரு முறை பேசிய கமல் ஹாசன். ' காந்தி, மஹாத்மா என்பதற்கு அவர் வாழ்ந்த வாழ்க்கையே போதும். அவர் இறக்கும் நேரத்தில் ஹே ராம் என்று சொல்லவேண்டும் என்று, எந்த அவசியமும் இல்லை' என்று கூறியிருந்தார்.
18. காந்தி சுடப்பட்டு இறந்த நாள் அன்று இரவு, அவரை கொன்றது முஸ்லீம் தான் என்று, நாடு முழுவதும் கலவரம் நடக்கும். அப்போது, காந்தியை கொன்றது முஸ்லீம் இல்லை..! ஒரு இந்து தான், என்று அறிவித்துவிடுவோம் என்று, முக்கிய தலைவர்கள், ஒரு அறைகுள் பேசிக்கொண்டு இருப்பார்கள். இதனை கேட்கும் சாகேத் ராம்,' காந்தியின் மரணத்தில் கூட மத சாயம் பூசப்படுகிறதே' என்று அறைக்கு வெளியில் இருந்து மனமுடைந்து அழுவார்.
19. சாகேத் ராம் மரணமடைந்த பிறகு, அவரது சடலம் வீட்டில் வைத்திருக்கும் நேரத்தில், சாகேத் ராமின் உடலை பார்க்க, காந்தின் பேரன் வருவார். அப்போது, சாகேத் ராமின் பேரன், காந்தியின் பேரனை அழைத்துக்கொண்டு, சாகேத் ராம் இத்தனை வருடங்களாக பத்திரமாக பார்த்துக்கொண்ட, காந்தியின் செருப்பும், கண்ணாடியும், காந்தியின் பேரனிடமே ஒப்படைப்பார்.
அப்போது இருட்டாக உருக்கும் அந்த அறையை, சாகேத் ராமின் பேரன் ஜன்னல்களை திறந்து வெளிச்சம் வரும்படி செய்வார். அந்த ஜன்னல்களில் காந்தியின் புகைப்படம் இருக்கும். இதன்முலம் கதையின் வெளிச்சத்தில் சாகேத் ராம் வந்துவிட்டார் என காட்டப்படுகிறது.
20. படத்தின் துவக்கத்தில், சாகேத் ராமிற்கு இருட்டு தான் மிகவும் பிடிக்கும் என்றும், காந்திக்கு தூக்கத்தில் கூட வெளிச்சம் வேண்டும் என்று ஒரு காட்சி அமைத்திருக்கும். ஆனால், தற்போது சாகேத் ராமின் அறைக்குள் காந்தியின் புகைப்படம் நிறைந்த ஜன்னல்களை திறந்தவுடன் வெளிச்சம் வருகிறது. இதனை வைத்து பார்க்கும் பொழுது, காந்தியின் மரணம், எந்த அளவிற்கு சாகேத் ராமை மாற்றியுள்ளது என்று காட்டியிருக்கிறார் இயக்குனர் கமல் ஹாசன்.
இப்படம் வெளியான சமையத்தில் கமல் ஹாசனுக்கு பல தரப்பில் இருந்து மிரட்டல்கள் வந்தது. ஏனென்றால், இப்படத்தில் மகாத்மா காந்தியை தவறாக காட்டிவிட்டார், கமல் ஹாசன் என்று அந்த எதிர்தரப்பினர்கள் கூறினார்களாம். படத்தை சரியாக பார்த்திருந்தால், அவர்களுக்கு இந்த எண்ணம் வந்திருக்காது. ஏனென்றால், மகாத்மா காந்தியை இந்த அளவிற்கு நல்லவர் என்று காட்டிய ஒரே படம், ஹே ராம் மட்டும் தான். அப்போது படத்தை சரியாக பார்க்காத சிலர், இப்படத்தை எதிர்த்தனர். படத்தை பார்த்துவிட்டு, புரியாமல் போராடினார்களா..? அல்லது..?
" ஹே ராம் "
கமல் ஹாசன்