ஹே ராம் - 2000ல் தோல்வியா..? புரியவில்லையா..?
கடந்த 2000ஆம் ஆண்டு 18ஆம் தேதி பிப்ரவரி மாதம் வெளியான படம் ஹே ராம். தமிழ், இந்தி என இரு மொழியிலும் வெளியானது. இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து, ஷாருக் கான், ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், ஹேம மாலினி, கிரீஷ் கர்னாட், நசிருதீன் ஷா, வி. எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசனே இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்தார். இப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டியிலும் கலந்து கொண்டது.
கதை
சாக்கேத் ராம் (கமல்ஹாசன்) ஒரு பிராமணராவார், மற்றும் அவரின் நண்பரான அம்ஜத் அலி கான் (சாருக் கான்) ஒரு இஸ்லாமியர். இருவரும் அகழ்வாராய்ச்சியாளர்கள் {archaeologist}. 1940 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் அகழ்வாராய்ச்சியில் இருவரும் மிக முக்கிய பங்கைவகிக்கின்றனர். அங்கிருந்து இரவு பார்ட்டி முடித்த கையுடன் இருவரும் பிரிக்கின்றனர். சாக்கேத் ராம் தனது காதல் மனைவியை பார்க்க கொல்கத்தா செல்கிறார். அப்போது, இந்திய பாக்கிஸ்த்தான் பிரிவினையின்போது கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறையில் சாக்கேத் ராம்மின் காதல் மனைவி அபர்ணா ராம் (ராணி முகர்ஜி) கொல்லப்படுகிறார்.
இஸ்லாமியர்களுக்கு அளவுக்கு அதிகமாக இடம் கொடுத்த மகாத்மா காந்தியே இதற்கு காரணம் என்று இந்துத்துவ குழுக்களால் சாக்கேத் ராம் மூளை சலவை செய்யப்படுகிறார். மனைவியை இழந்த துயரமும், பழிவாங்கும் உணர்வும், மூளை சலவையும் சேர்ந்து இஸ்லாமியர்களையும், காந்தியையும் வெறுக்கத்தொடங்குகிறார் சாகேத் ராம். மேலும் நண்பர் லால்வானியின் (சௌரப் சுக்லா) குடும்பம் வன்முறையால் சிதறுண்டதை அறிந்தபின், அந்த வெறுப்பு வளுவடைகிறது. மகாத்மா காந்தியை கொல்வதற்காக இந்துத்வ அமைப்பினால் சாக்கேத் ராம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு செல்லும் சாக்கேத் ராம், இரண்டாம் தாரமாக மைதிலியை { வசுந்தரா தாஸ் } திருமணம் செய்கிறார். ஆனால், காந்தியை கொல்வதற்காக தன் இரண்டாம் தாரத்தையும் விடுத்து தில்லிக்கு செல்லும் முன்பாக, வாரணாசிக்கு சென்று கங்கையில் புனித நீராடி துறவறம் ஏற்கிறார் சாகேத் ராம். தனது குறிக்கோளை அடைய டெல்லிக்கு செல்கின்றார். அங்கு தனது கையடக்க துப்பாக்கியுடன் ஒரு விடுதியில் தங்கியிருக்கும் பட்சத்தில் காவல்துறையினரால் தேடப்பட்ட போது கையடக்க துப்பாக்கியை ஒரு வண்டியின் மேல் போட்டு விட்டார். அவ்வண்டியும் இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதிக்கு செல்லவே அங்கு செல்கின்றார் சாக்கேத் ராம். அங்கு தனது பழைய நண்பரும் காந்தியை பின்பற்றுபவருமான அம்ஜத்தை சந்திக்கின்றார். அங்கு, சாக்கேத் ராம் தனது துப்பாக்கியை பெற்று கொள்ளுகிறார்.
அப்போது சாகேத் ராமின் நோக்கத்தை அறிந்த அம்ஜத், காந்தியின் உயிருக்கு பதிலாக தனது உயிரை எடுத்து கொள்ளுமாறு சாகேத் ராமிடம் மன்றாடுகிறார். அங்கு நடந்த சம்பவங்களில் அம்ஜத்தின் நெருங்கிய உறவினர்கள் சிலரின் மரணத்திற்கு சாகேத் ராம் தன்னை அறியாமல் காரணமாகிறார். இருந்தாலும் சாகேத் ராமை காட்டி கொடுக்காமல் அம்ஜத் உயிர் இழக்கிறார். அம்ஜத்தின் மரணம் சாகேத் ராமை உலுக்குகிறது. மதவெறியால் ஏற்படும் இழப்புகளை உணர்ந்து காந்தியிடம் மன்னிப்பு கேட்க செல்லும் பொழுது, கூட்டத்தில் இருந்த கோட்சேயின் துப்பாக்கி குண்டுகள், காந்தியை துளைக்கிறது. இதனால் உடைந்து போகும் சாக்கேத் ராம், அங்கிருக்கும் காந்தியின் காலணிகளை எடுத்துக்கொண்டு புறப்படுகிறார். தனது இறப்புக்கு பிறகும் காந்தியின் காலணிகளை பத்தரப்படுத்தி வைக்கிறார், சாக்கேத் ராம்.
ஏன் 2000ல் இப்படம் தோல்வியானது
கமெர்ஷியல் மசாலா எதுவும் இல்லாமல், பல விஷயங்களை ஆர்ட் பார்ம் வகையில் ஹே ராம் திரைக்கதை அமைக்கட்டிருந்தது. படத்தில் வரும் பல விஷயங்கள் குறியீடுகளாக அமைக்கப்பட்டிருக்கும்.
உதாரணத்திற்கு :
1. படத்தின் துவக்கத்தில் டைட்டில் வரும் பொழுது, ஹே ராம் எனும் டைட்டிலுக்கு பின் 'ரகுபதி ராகவ ராஜா ராம்' எனும் ஹிந்துக்களின் தெய்விக பாடல் கமல் ஹாசனின் குரலில் ஒழிக்கும். ஆனால், கொஞ்சம் மாறுபட்டு, இஸ்லாமியர்கள் தொழுவது போல் இந்த பாடல் ஒழிக்கும். படத்தின் துவக்கமே, படத்தின் மூலம் கதையை சொல்லும் குறியீடாக அமைக்கட்டிருக்கும்.
2. தனது மனைவியை இழந்து, மதம் பிடித்த யானை போல் மனிதர்களை கொள்ளும் வேட்டையில் சாக்கேத் ராம் ஈடுபட்டிருப்பார். மற்றொரு புறம், யானை ஒன்று தனது பாகனை இழந்து மதம் பிடித்த, தெருவில் அலைந்துகொண்டிருக்கும்.
அங்கிருந்து அப்படியே கட் செய்தால், தனது இரண்டாம் திருமணத்திற்கு பெண் பார்க்க செல்லும் கமல் ஹாசன் கோவில் அருகே கோவில் யானையை ஒன்றை பார்ப்பார். அப்போது யானையின் கால்கள் கட்டப்பட்டு இருக்கும். அதே போல், சாக்கேத் ராமூக்கு கால் கட்டு போடுவதற்கு தான், தற்போது சென்றுகொண்டு இருக்கிறார்கள் என்பதை அதில் மறைமுகமாக கமல் ஹாசன் காட்டியிருப்பார்.
3. மருத்துவமனையில் அபயங்கரை சந்திக்க செல்லும், சாக்கேத் ராமிடம், அபயங்கர் ஒரு பார்சலை தனது நெஞ்சில் வைத்து பிரிக்க சொல்வார். அந்த பார்சலில், ஒரு துப்பாக்கி இருக்கும். அப்போது அந்த காட்சியில் ஹனுமானின் புகைப்படத்தையும், காட்டுவார்கள். இதனை வைத்து பார்க்கும் பொழுது, ஹனுமான் நெஜுக்குள் ராமர் இருப்பதுபோல், அபயங்கர் நெஞ்சில் பழிவாங்கும் எண்ணமும், வன்மமும் தான் இருக்கும் என்று காட்டிற்யிருப்பார்கள்.
இப்படி ஹே ராம் படத்தில் ஒவ்வொரு காட்சிக்கு பின்னும் பல குறியீடுகளை கமல் ஹாசன் மறைத்து வைத்துள்ளார். இதனை போல் பல குறியீடுகள் படம் வெளியான போது, பலருக்கும் தெரியாமல் போனதன் காரணமாகவே இப்படம் யாருக்கும் புரியாமல் போனது.
2021 ஹே ராம் - கமல் ஹாசனின் மாபெரும் படைப்பு
திரையுலகம் வளர வளர பல விஷயங்கள் டெக்னிகல்லாகவும், கதை, திரைக்கதை என சினிமா சம்மந்தப்பட்ட பல விஷயங்களை ரசிகர்கள் தெரிந்துகொள்ள ஆரம்பித்தனர். அப்படி ஹே ராம் படத்தை இந்த ஜெனரேஷன் ரசிகர்கள் குறியீடுகளுடன் பார்க்க துவங்கி, பல விஷயங்களை கமல் ஹாசன் இப்படத்தில் காட்டியுள்ளார் என்று தெரிந்துகொண்டும், இப்படத்தை சமூக வலைத்தளங்களிலும், இணையத்திலும் தற்போது கொண்டாட வருகின்றனர்.
இதனை குறித்து பல வருடங்களுக்கு முன் கமல் ஹாசன் ஒரு பேட்டியில் கூறியதாவது : ஹே ராம் எனக்கு தோல்வியோ, அல்லது நஷ்டமடைந்த படமோ இல்லை.. இது எப்படி நஷ்டமாகும். நஷ்டம் என்பது நம்மை பெற்ற தாய்யை இழந்தால், அதுதான் நஷ்டம். நான் ஹே ராம் படத்திலிருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். இப்படத்தை வருங்கால ஜெனரேஷன் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். ஹே ராம் எனக்கு நஷ்டம் கிடையாது " என்று கூறியுள்ளார்.
சாகேத் ராம் Vs காந்தி
மஹாத்மா காந்திக்கு முற்றிலும் எதிரான ஒரு கதாபாத்திரம் தான் சாகேத் ராம். இதனை கமல் ஹாசனே ஒரு மேடையில் வெளிப்படையாக கூறியிருந்தார். அப்படி காந்திக்கும், சாகேத் ராமூக்கும் ஏன் இவ்வளவு வேற்றுமை என்று பார்க்கலாம்..
1. படத்தின் துவக்கத்தில் சாகேத் ராமின் பேரன் ' தனது தாத்தா சாகேத் ராமூக்கு எப்போதும் இருட்டு தான் பிடிக்கும் ' என்று கூறுகிறார். ஆனால், காந்திக்கு ' தூங்கும் போதும் லைட் எரிந்துகொண்டே தான் இருக்க வேண்டும் ' என்று சாகேத் ராமின் மருத்துவர் கூறுகிறார். இதிலிருந்தே இருவரும் வெவ்வேறு துருவங்கள் என்று காட்டப்படுகிறது.
2. சாகேத் ராம் முற்றிலுமாக வன்முறையின் பக்கம் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். காரணம் காந்தியை கொள்ளவேண்டும் என்பதே. ஆனால், வன்முறை அமைதியை தாராது, அகிம்சை தான் நம்மை நல்வழியில் எடுத்துச்செல்லும் என்று கூறுகிறார் காந்தி. ஆனால், இருவருக்குள்ளும் இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை, இருவரும் வைஷ்வத்தை பின்பற்றினார்கள் என்பது தான்.
ஒரு கட்டத்தில் தனது நண்பன் அம்ஜத்தை இழக்கும் சாகேத் ராம், தனது வன்முறையால், தான் தன்னுடைய நண்பன் மரணித்தான் என்று மனமுடைந்து போய், வன்முறையை கைவிடுகிறார். இதன்பின் காந்தியிடம் மன்னிப்பு கேட்க செல்லும் பொழுது, கோட்செ காந்தியை கொன்றுவிடுகிறார். அப்போது பின்னணி இசையில் 'வைஷ்னவ ஜனதோ' எனும் பாடல் ஒலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹே ராம் வெளியானபோது, வெற்றியடையவில்லை. ஆனால் தற்போது திரையுலகை கற்றுக்கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படம், பாடமாக அமைந்துள்ளது. டெக்னிகலாகவும், கதை வழியாகவும் இப்படம் மிகப்பெரிய பாடத்தை வருங்கால இயக்குனர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. ஹே ராம் படம் 2000ல் தோல்வியடையவில்லை.. வெற்றியை தள்ளிப்போட்டிருந்தது.. ஏனென்றால் வெற்றி கூட ஹே ராம் படத்திற்கு சிறிய விஷயம் தான்.. காரணம், கமல் ஹாசனின் படைப்பு
ஹே ராம் தோல்வியால் அளிக்க முடியாத சகாப்தம்