பாக்ஸ் ஆபிஸ்: ஹாய் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்
கவின், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஹாய் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ஹாய்
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஹாய். இப்படத்தில் மறைந்த நடிகர் பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், பிரபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், ஹாய் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் இப்படம் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri