பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
கவின், நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'ஹாய்' திரைப்படத்தின் 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
'ஹாய்'
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் விதவிதமான கதைக்களத்தில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த வாரம் காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம்தான் 'ஹாய்'.

இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்க, கவின் மற்றும் நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும், ராதிகா சரத்குமார், பிரபு, பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான 'ஹாய்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இருந்தும் ஓப்பனிங் வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், 3 நாட்களை கடந்திருக்கும் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
பிரித்தானியாவில் வாழும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி News Lankasri
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu