ஹாய்: திரை விமர்சனம்

By Karthick Raja Aug 28, 2026 08:21 AM GMT
Report

பாடலாசிரியர் விஷ்ணு எடவனின் அறிமுக இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள ஹாய் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

ஹாய்: திரை விமர்சனம் | Hi Movie Review

கதைக்களம்

திருமணம் செய்தால் காதலித்துத்தான் செய்து கொள்வேன் என்கிற லட்சியத்தோடு இருக்கிறார் கதாநாயகன் கவின் (மயில்சாமி). ஆனால், இவர் எந்த பெண்ணிடம் தனது காதலை கூறினாலும், அவர்கள் 'நோ' மட்டும்தான் சொல்கிறார்கள்.

இப்படி பல நிராகரிப்புகளை சந்தித்து வரும் கவினுக்கு, அவருடைய வீட்டில் பெண் பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இந்த திருமணத்தில் தனக்கு துளிகூட விருப்பம் இல்லாத காரணத்தினால், தனது ஊரிலிருந்து சென்னைக்கு வந்துவிடுகிறார்.

ஹாய்: திரை விமர்சனம் | Hi Movie Review

மறுபக்கம், நயன்தாராவுக்கு (தேவயானி) கட்டாய திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது. திருமணத்தை தடுத்து நிறுத்த முடியாததால், அங்கிருந்து தப்பித்து தனது தோழி இருக்கும் ஊரான சென்னைக்கு வருகிறார் நயன்தாரா. சென்னையில் கவின் - நயன்தாரா சந்திக்கிறார்கள். இருவருக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது.

இந்த நட்பு எப்படி காதலாக மாறியது? இந்த காதலுக்காக கவின் மற்றும் நயன்தாரா எடுத்த ரிஸ்க் என்னென்ன? இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. 

ஹாய்: திரை விமர்சனம் | Hi Movie Review

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகன் கவின் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்துள்ளார். படத்தின் ஆரம்பத்தில் பல வித்யங்களுக்கு தயங்கும் இவர், இடைவேளை காட்சியில் காதலுக்காக துணிச்சலாக செய்த விஷயம், இரண்டாம் பாதியில் நகைச்சுவையாகவும், எமோஷனலாகவும் நடித்த விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

கதாநாயகி நயன்தாரா வழக்கம் போல் தனது அழகான நடிப்பினால் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். குறிப்பாக ப்ரீ கிளைமாக்ஸில், பொய் சொல்லி அனைவரையும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம் என குற்றஉணர்ச்சியில் அவர் நடித்த விதம் சிறப்பாக இருந்தது.

ஹாய்: திரை விமர்சனம் | Hi Movie Review

மேலும் ராதிகா சரத்குமார், பிரபு மற்றும் மறைந்த இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் தங்களது அனுபவ நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து மற்ற அனைவரும் நடிகர்கள், நடிகைகளும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் சற்று வித்தியாசமான குடும்பங்களுக்கு பிடிக்கும் வகையில் இப்படத்தின் கதைக்களத்தை அமைத்துள்ளார். கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, நகைச்சுவை காட்சிகள், வசனங்கள் எல்லாம் படத்தில் மிகவும் அழகாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தன. அதற்கு இயக்குநருக்கு வாழ்த்துகள்.

ஹாய்: திரை விமர்சனம் | Hi Movie Review

ஆனால், திரைக்கதை ஓட்டம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம் என உணர முடிகிறது. அதேபோல், எமோஷனல் கனெக்ட் இன்னும் வலுவாக இருந்திருக்க வேண்டும், அதுவும் மிஸ்ஸிங். மேலும், சில இடங்களில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எளிதாகவே கணிக்க முடிகிறது.

படத்திற்கு மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு; ஒவ்வொரு காட்சியும் மிகவும் அழகாக காட்டப்பட்டுள்ளது. அதேபோல், பின்னணி இசையும் அந்த காட்சிகளுக்கு அழகாக பொருத்திபோகிறது. எடிட்டிங் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம்.

பிளஸ் பாயிண்ட்ஸ்

கவின், நயன்தாரா

நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு

ஒளிப்பதிவு, பின்னணி இசை

கதாபாத்திர வடிவமைப்பு, வசனங்கள், நகைச்சுவை காட்சிகள்

மைனஸ் பாயிண்ட்ஸ்

விறுவிறுப்பில்லாத திரைக்கதை

எமோஷனல் கனெக்ட் வலுவாக இல்லை

கணிக்கக்கூடிய சில காட்சிகள்

மொத்தத்தில் இந்த 'ஹாய்' குறைகளும் நிறைகளும் கலந்திருந்தாலும் ஏமாற்றமே. இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம்.

ஹாய்: திரை விமர்சனம் | Hi Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US