Hi நானா படத்தின் ஒரு வாரம் வசூல்.. வெற்றியா? அல்லது தோல்வியா? பார்க்கலாம் வாங்க
Hi நானா
தெலுங்கில் இருந்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் Hi நானா. இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்தும் வெளியிட்டு இருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் இப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஹீரோவாக நாணி நடிக்க நடிகை மிருணாள் தாகூர் ஹீரோயினாக நடித்திருந்தார்.
மேலும் ஜெயராம், குழந்தை நட்சத்திரமாக கியாரா கண்ணா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த டிசம்பர் 7ஆம் தேதி உலகளவில் வெளிவந்த இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
Hi நானா திரைப்படம் வெளிவந்த கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் மீண்டும் ஒரு சூப்பர்ஹிட் படத்தை கொடுத்துள்ளார் நடிகர் நாணி. ஏற்கனவே இந்த ஆண்டு நாணி நடிப்பில் வெளிவந்த தசரா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்த நிலையில், அதை தொடர்ந்து தற்போது Hi நானா திரைப்படமும் வெற்றியடைந்துள்ளது. இந்த வருடம் நடிகர் நாணிக்கு டபுள் ட்ரீட் தான்.

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
